முட்டுக்கட்டைகள்
புதுவைத் தமிழ்நெஞ்சன்
இங்கே
முட்டுக்கட்டைகள் கிடைக்கும்
முட்டுக் கொடுப்பதற்கு மட்டுமல்ல..
முட்டி சாய்ப்பதற்கும்.
எல்லா முட்டுக்கட்டைகளும்
முட்டுக்கட்டைகளாக இருப்பதில்லை.
சில
முட்டுக்கட்டைகள்
தேரையே கவிழ்த்துவிடுகின்றன.
சில
முட்டுக்கட்டைகள்
தேரை நிறுத்தி விடுகின்றன
சில
முட்டுக்கட்டைகளுக்கு
வடிவங்கள் வேறு வேறாக இருக்கிறன.
அந்த முட்டுக்கட்டைகள்
நானாகவும்
நீயாகவும்
நாமாகவும கூட இருக்கலாம்.
நமக்குள்ளும்
சில...பல ...
முட்டுக்கட்டைகள் இருக்கின்றன.
அதை
அறிந்து கொள்ளவும்
புரிந்து கொள்ளவும்
தெரிந்து கொள்ளவும் வேண்டும்.
அப்போது தான்
முட்டுக்கட்டைகள் இல்லாமல்
நம் வாழ்க்கை சரியான பாதையில் செல்லும்
வரலாற்றில் வெல்லும்.
எல்லா இடங்களிலும்
முட்டுக்கட்டைகள் இருக்கின்றன
முட்டுக்கட்டைகள்
இல்லாத இடமே இல்லை.
முட்டுக்கட்டைகளை
நாம் எப்படி பயன்படுத்துகிறோம்
என்பதில் தான் இருக்கிறது
முட்டுக்கட்டைகளின் பயன்.
தேரை நிறுத்தவும்,
திசை மாற்றம் செய்வதுதான்
முட்டுக்கட்டைகளின் வேலை என்றில்லை
முட்டுக்கட்டைகளைப்போடும்
சில முட்டுக்கட்டைகள்
தவறுதலான இடத்தில்
முட்டுக்கட்டைகளைப் போட்டு விடுவதால்
முச்சந்தியில் நின்றுவிடுகின்றன
தேரைப் போல....
எல்லா வேலைகளும்.
முட்டுக்கட்டைகளின் பணி
முட்டுக்கட்டைகளுக்கு தெரியாது.
முட்டுக்கட்டைகளைக் கூட
சரியாகப் பயன்படுத்தினால்
நன்றாக வேலை முடியும்
முட்டுக்கட்டைகள்
இல்லாத உலகம்
என்று
ஒன்று
எங்கும் இல்லை
முட்டுக்கட்டைகள் நிறைந்த உலகம்
முட்டுக்கட்டைகள் குறைந்த உலகம்
என்றுதான் இருக்கிறது.
இனியாவது
முட்டுக்கட்டைகளுக்கு
முட்டுக் கொடுப்பதை நிறுத்துவோம்
எதற்கும்
முட்டுக்கட்டைகள் போடாமல்
முடிந்த அளவு
முட்டுக்கட்டைகளைத் தவிர்ப்போம்
முட்டுக்கட்டைகளை
வடிவமைத்தவர்கள்
முட்டுக்கட்டைகள் அல்லர்
முட்டுக்கட்டைகளின்
பயனை அறிந்தவர்கள் தான்
எனவே,
முட்டுக்கட்டைகள்
முட்டுக்கட்டைகளாகவே இருக்கட்டும்.
நாம்
முட்டுக்கட்டைகளாக இல்லாதிருப்போம்

கருத்துகள்
கருத்துரையிடுக