மதுரை அழகர்கோயில் சாலை மூனூர் பொய்கரைப்பட்டி. அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கான புதிய கட்டிட திறப்பு விழா படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

நிகழ்ச்சி அறிக்கை. அழகர்கோயில் சாலை மூனூர் பொய்கரைப்பட்டி.அகவிழி புதிய விடுதி. 07.09.2025 (ஞாயிற்றுக்கிழமை) மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கான புதிய கட்டிட திறப்பு விழா அகவிழி பார்வையற்றோர் விடுதி இன்னிசை குழுவின் இறை வணக்கம் பாடலோடு இனிதே தொடங்கியது. விடுதி பயனாளி திரு. ஆர். கார்த்திக் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக 1. மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மாண்புமிகு. ஜெயக்குமாரி ஜெமி ரத்னா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, அகவிழி பற்றிய காணொளியைத் தொடர்ந்து அகவிழி கடந்து வந்த பாதை தமிழ் அச்சு புத்தகத்தை வெளியிட திரு. பாஸ்கர், (அறங்காவலர், மூன்றாம் பார்வை அறக்கட்டளை) அவர்கள் பெற்றுக்கொண்டு, மாண்புமிகு. மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அவர்கள் தலைமையுரை ஆற்றினார் 2. அகவிழி கடந்து வந்த பாதை தமிழ் பிரெயில் புத்தகத்தை திரு. கு. சாமிதுரை, சட்ட ஆலோசகர், அறம் அறக்கட்டளை, செயலாளர், இந்திய வழக்கறிஞர் சங்கம் அவர்கள் வெளியிட அகவிழி பார்வையற்றோர் விடுதி பயனாளி திரு. கார்த்திக் அவர்கள் பெற்றுக்கொண்டார். 3. அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் திரு. கு. சாமிதுரை அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 4. அடுத்ததாக, தமிழ்ச்செம்மல். கவிஞர். இரா. இரவி அவர்கள் புத்தகம் அறிமுகம் மற்றும் வாழ்த்துரை வழங்கியதோடு விடுதி நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வரும் விடுதி பயனாளிகளுக்கு சிறப்பு பரிசை வழங்கினார். 5. திரு. ரா. பாலகணேசன், தமிழாசிரியர் அவர்கள் புத்தகம் பற்றிய ஆசிரியரின் அனுபவ உரை ஆற்றினார். 6. ஏ. செல்வமணி, (உதவி இயக்குநர், இந்திய விளையாட்டு ஆணையம்) அவர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை ஆற்றினார். 7. இறுதி நிகழ்வாக விடுதி நிறுவனர் திரு. கோபி (எ) இராமசாமி அவர்கள் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசினை வழங்கி நன்றியுரை ஆற்றினார். அதனை தொடர்ந்து தனது தலைமையில் இந்த விடுதி முன்னேற்ற பாதையில் நடைபோடும் என்று உறுதியளித்தார். படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.
href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYkCtaegsvU8l2F5kF1xCbgCYv-awOs4jJbJjhurJHWZYg98-tmm3bVV5yYF6Plw8yA5LVOFLckzmTAhzFsngmXP-UOGgHcrVX_eTBWY_A9d3jaLHPfLMMq2G_YPIbo_E10vD6aCAk4mDZNUqIrqHC7ZVDInMJ4zOPwHvn7LjLf36O3d4c9uG9PDFtmri4/s1600/71.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; ">
/AVvXsEi7Zhivyvg7CiJVtsTWHdTlt26FFpcSRgAoJxi6zOotKYISLeuIA0KMC5ZVMxMyT1TOOjyyjROxny21eRzeIeEle6PSLQ7g9cmD-GAVM_GMENPecXdLMQGhZA1KCR8PQV3nv1hFPIPoBBFIeJ9G-uh3XUJoGziHoF6Gz0-74vdldJqpTnGmhK0e8sueJuXE/s600/37.jpg"/>

கருத்துகள்