படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

பாவாணர் பிறந்தநாள் : "உலக முதல் மாந்தன் தமிழன். அவன் பிறந்த இடம் குமரிக்கண்டம். திராவிடத்திற்குத் தாயும், ஆரியத்துக்கு மூலமும் தமிழே என்னும் உண்மையை நிலைநாட்டுவது என் வாழ்க்கைக் குறிக்கோள், அதற்காகவே அரைநூற்றாண்டு அரும்பாடுபட்டு ஆய்ந்தேன்" என்றார் பாவாணர். வடமொழி ஒரு செயற்கையான மொழி. அதில் ஐந்தில் இரு பகுதி முழுத்தமிழ்ச் சொல், மற்ற இரு பகுதி தமிழிலிருந்து திரிந்த திரிசொல். மீதி ஒரு பகுதி இடுகுறிச்சொல். ஆகவே வடமொழிக்குத் தமிழே மூலம் என்று உறுதியாகச் சொன்னார். 73 மொழிகளில் வேர்ச்சொல் விளக்கம் காட்டும் அளவுக்கு ஆய்வு செய்தார். 1968 உலகத் தமிழ்க் கழகம் அமைத்து தனித்தமிழ்க் கொள்கையைப் பரப்பினார். வாழ்வு எல்லாம் வண்டமிழ்க்கே என வாழ்ந்த அவர், மறைமலையடிகள், பெரியார்,பாவேந்தர், பெருஞ்சித்திரனார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் உள்ளிட்ட பெருமக்களின் பாராட்டுகளை ஒருங்கே பெற்றவர். ( திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேய பாவாணர் பிறந்தநாள் 07.02.1902) படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.வரலாற்றில் இன்று பிப்ரவரி 7,1902 உலகின் முதன்மொழி ஆராய்சியாளர் தேவநேயப்பாவாணர் ( Devaneya Pavanar ) அவர்களின் பிறந்த தினம்.. (பிப்ரவரி 7, 1902- ஜனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக பெருஞ்சித்திரனாரால் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார். வாழ்க்கை வரலாறு.. பிறப்பு.. பாவாணர் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞானமுத்து என்னும் கணக்காயருக்கும், பரிபூரணம் அம்மையார் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் கோமதிமுத்துபுரத்தில் பிறந்ததாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் (சங்கரன்கோவில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசுவை (Stokes)கிறித்தவ மத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார் . ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி, திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களைக் கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார். முத்துசாமி தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர். 1906 - பாவாணரின் தந்தையாரும் அன்னையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர். சங்கரநயினார் கோயில் வட்டம் வட எல்லையாகிய சீயோன்மலை என்னும் முறம்பில் 'யங்' துரை என்பார் காப்பில் தேவநேயப் பாவாணர் தொடக்கக் கல்வி பயின்றார். படிப்பும், பணிகளும்.. 1912 - தம் ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர், வட ஆர்க்காடு மாவட்டம், ஆம்பூரில் மூத்த அக்காளான பாக்கியத்தாயின் பேணலில் வளர்ந்தார். சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், ஆம்பூரில் உள்ள மிசௌரி உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்தார். 1916 - பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளியில்(C.M.S.) IV, V, VI ஆம் படிவங்கள் (இந்நாளில் 9, 10, 11 ஆகிய வகுப்புகள்) பயின்றார். 1919 - இராமநாதபுரம் மாவட்டம் முறம்பு என்னும் சீயோன் மலையில் உயர்தரப்பள்ளி ஒன்றை உருவாக்கி அதன் தாளாளராக இருந்த யங் என்பவர் பணவுதவி செய்தார்; பின்பு தன் 17ம் அகவையில், 1919 ஆண்டு தாம் பயின்ற சீயோன் மலை உயர்தரப்பள்ளியிலேயே முதல் படிவ (ஆறாம் வகுப்பு) ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1921 - ஆம்பூர் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணிவுயர்வு பெற்றார் (3 ஆண்டுகள்). 1924 - மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத்தேர்வில் அவ்வாண்டு தேர்ச்சி பெற்ற ஒரேயொருவர் தேவநேயர் என்ற சிறப்பும் பெற்றார்.'ஞா.தேவநேசக் கவிவாணன், மிசன் உயர்தரப் பாடசாலை, ஆம்பூர்,வடார்க்காடு ஜில்லா (மாவட்டம்)' என்பது தேர்ச்சிக் குறிப்பு (செந்தமிழ் தொகுதி 22) சென்னை வருகை; பிரம்பூர் கலவல கண்ணன் செட்டி உயர்நிலைப்பள்ளி. 1925 - சென்னை, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப்பள்ளி. 1926 - சென்னை, தாம்பரம் கிறித்தவ உயர்நிலைப்பள்ளி (மூன்றாண்டு) திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் அவ்வாண்டு தேர்ச்சியடைந்த ஒரேயொருவர் தேவநேயரே. (செந்.செல்.4:336); சென்னைப் பல்கலைக்கழக வித்துவான், கீ.க. தேர்வு (B.O.L) என்னும் இளநிலைத் தேர்விலும் வெற்றி பெற்றார்; எசுந்தர் அம்மையார் திருமணம்.ஈராண்டில் இயற்கை. ஒரு குழந்தை மணவாளன்; தத்தாகத் தரப்படுதல். 1929 மன்னார்குடிப் பின்லேக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஆறாண்டு பணி; இக்காலகட்டத்தில், இராசகோபாலர் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். 1930 தேவநேயர்-நேசமணியார் திருமணம். 1931 'மொழியாராய்ச்சி' - ஒப்பியன் மொழி நூல்' என்னும் மொழியாய்வுக் கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் வெளிவருதல். 1934 திருச்சி பிசப் ஈபர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பது ஆண்டுகள் (1934-1943) பணிசெய்தார். 1935 - திரவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே என்னும் தலைப்பில் கீ.க.மு.(M.O.L.) பட்டத்திற்காக இடுநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வழங்குதல். 1936 - இடுநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் தள்ளப்படுதல். 'இனி எனது நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்' என உறுதிக் கொள்ளல். 1940 - ஒப்பியன் மொழிநூலை வெளியிட்டார். 1943 - சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி (ஓராண்டு). தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்பு (21.10.43). தொல்காப்பியக் குறிப்புரை வரைவு. 1944 - சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் (பன்னீராண்டு) ஏந்தாக வாழ்தல். 1947 - பெரியார் வெள்ளிப் பட்டயம் வழங்கிப் பாராட்டல். 1952 - தமிழ் முதுகலைப் பட்டம் (M.A.) பெறுதல். நாள் அடைவு தொகு 12.07.1956 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - திரவிட மொழியாராய்ச்சித் துறை (ஐந்தாண்டு) 24.09.1961 - காட்டுப்பாடியில் வாழ்வு. 27.10.1963 - மனைவியார் நேசமணி அம்மையார் இயற்கை எய்துதல். 12.01.1964 - தமிழ்ப்பெருங்காவலர் விருது; தமிழ்க் காப்புக் கழகம், மதுரை 06.10.1966 - உ.த.க. தோற்றம்; திருச்சிராப்பள்ளி. 08.09.1967 - மணி விழா, மதுரை. 28.12.1969 - உ.த.க. முதலாண்டு விழா, பறம்புக்குடி 09.01.1971 - உ.த.க. இரண்டாம் விழா, மதுரை. 12.02.1971 - தென்மொழி, பாவாணர் அகரமுதலித் திட்டத் தொடக்கம். 05.05.1971 - குன்றக்குடி அடிகளார் பாரி விழாவில் 'செந்தமிழ் ஞாயிறு' விருது வழங்குதல் 31.12.1972 - தமிழன் பிறந்தகம் குமரிநாடே என்னும் தீர்மானிப்பு மாநாடு, தஞ்சை. 08.05. 1974 - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக அமர்த்தம். 15.01.1979 - தமிழ்நாட்டு அரசு 'செந்தமிழ்ச் செல்வர்' விருது வழங்குதல். 05.01.1981 - மதுரை உலகத் தமிழ் மாநாட்டுப் பொதுநிலைக் கருத்தரங்கில், 'மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' என்னும் பொழிவு. நெஞ்சாங்குலைத் தாக்குண்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுதல். 14.01.1981 - மீளவும் நெஞ்சாங்குலைத் தாக்கம். 15.01.1981 - இரவு 12.30க்கு இயற்கை எய்துதல். 16.01.1981 - சென்னை, கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம். இறுதி நாட்கள்.. மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, "மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்" எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 15 பின்னிரவு (அதிகாலை) இயற்கை எய்தினார். .

கருத்துகள்