எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி

எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி தமிழறிஞர்கள் போற்றிப் பாராட்டிய எம் தை மகள் தமிழகத்தில் எங்கே? என தேடி வரும் நிலை இன்று! தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடும் தமிழன் தைத் திங்களை கோலாகலமாகக் கொண்டாடாதது மடமை! புத்தரிசியில் பொங்கல் இட்டு கொண்டாடினோம் அன்று புத்தரிசிக்கு வழியின்றி வாடி நிற்கிறான் உழவன் இன்று! தினந்தோறும் உழவனின் தற்கொலைகள் தொடர்கதை தமிழக உழவன் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை! பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தனர் பெருமுதலாளிகள் மட்டுமே வாழ முடியும்! கோடிகளைப் பெற்று ஏமாற்றி விட்டு கம்பி நீட்டி விடுகிறார்கள் பெருமுதலாளிகள்! உழவன் ஓராயிரம் ரூபாய் கடன் கட்டவில்லை எனில் ஓராயிரம் கேள்விகள் கேட்டு சாகடிக்கின்றனர்! ஏர் இந்தியா விமான நிறுவனம் தனியாருக்கு ஆயுள் காப்பீட்டுக் கழகமும் தனியாருக்கு! பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாகிறான் ஏழை உழவனோ மேலும் மேலும் ஏழையாகிறான்! பாரத நாடு பணக்காரர்களுக்கான நாடானது பங்குப்போட்டு நாட்டையே விற்று வருகின்றனர்! மல்லையா என்ற கொள்ளையாவை இன்றுவரை மடக்கி பிடிக்க முடியவில்லை நம் நாட்டுக்கு! கோடி கோடியாக வராக்கடன் என்கின்றனர் கோடித்துணி இல்லாத ஏழைகளைத் துன்புறுத்துகின்றனர்! ஏறிய பெட்ரோல் விலையை இறக்க மறுக்கின்றனர் ஏழைகளின் வாழ்வை நசுக்கிடும் பெட்ரோல் விலை! உழவனின் வாழ்வில் ஒளியேற்ற வாருங்கள் உழவனின் உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்குங்கள்! உழைத்து விளைவித்த நெல்லை விற்பதற்கு உரிய விலை வழங்கிட உடன் முன்வாருங்கள்! அரிசி என்பது அடிப்படை உணவு அனைவருக்கும் அரிசி இல்லையேல் உலகில் உயிர்கள் இல்லை! உழவுத்தொழில் நலிந்து வருவது நல்லதல்ல உழவைப் போற்றிப் பாராட்டி வளர்த்திட வேண்டும்! மட்டை விளையாட்டிற்கு தரும் முக்கியத்துவத்தை மகத்தான விவசாயத்திற்கு தந்திட முன்வாருங்கள்! கோடிகள் ஈட்டும் நடிகனைக் கொண்டாடியது போதும் கழனியில் உழைத்திடும் உழவனைக் கொண்டாடுங்கள்! உழவனின் தற்கொலையை தடுத்து நிறுத்துங்கள் உழவனின் வாழ்வாதாரத்தை வளப்படுத்திடுங்கள்! உயர்தொழிலாம் உழவுத்தொழில் புரியும் உழவன் உண்மையில் மகிழ்வோடு வாழவேண்டும்! வழக்கொழிந்து வரும் விவசாயத்தை வளர்ப்போம் விவசாயிகளை அனைவரும் ஊக்கப்படுத்த வேண்டும்! உயிர் காக்கும் உணவு தரும் ஒப்பற்ற உழவனை உயர் மதிப்பு வழங்கி போற்றிப் பாராட்டுவோம்! இனிஒரு உழவன் கூட தற்கொலை செய்யாமல் எல்லோரையும் காக்க வேண்டியது நம் கடமை! உழைத்தவனுக்கு உரிய அங்கீகாரம் வழங்குங்கள் உழைப்பாளர் வாழ்வு உயர்ந்திட வழிவகுத்திடுங்கள்! கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்தது போதும் கடைநிலை உழவர்களை முன்னேற்றி விடுங்கள்! குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யுங்கள் குறையாமல் விவசாயம் குறையாமல் காப்பாற்றுங்கள்! உழவனுக்கு உழைத்திட்ட வெகுமதி இல்லை ஊரை அடித்து உலையில் போடுவோருக்கு காலம் ! உப்புக்கு வரியா? என உணர்ச்சிப் பொங்கிட ஓங்கி உரைத்தோம் இங்கிலாந்துக்காரனிடம் அன்று ! வாங்கினால் வரி விற்றால் வரி எனஎங்கும் வரிஎன்றானது இந்தியர்ஆளும் நல்லாட்சியில் ! ஜிஎஸ்டி என்ற பெயரில் வரிகள் விதித்து சிறுகுறு தொழில்களுக்கு மூடுவிழா நடத்தினர் ! அய்நூறு ஆயிரம் செல்லாது என அறிவித்து அனைவரையும் இன்னலில் ஆழ்த்தினர் ! ஒருநோட்டு மாற்றிட சராசரி மக்கள் ஒருநாள் முழுதும் காத்திருந்து நொந்தனர் ! கோடிகளை உடன் மாற்றிக் கொடுத்துவிட்டு கமிசனாக கோடிகள் திரட்டி மகிழ்ந்தனர் ! உழவனின் வயிற்றில் அடித்து வந்தனர் உழவன் துன்பக்கடலில் நீந்தி வந்தான் ! பணக்காரன்கள் மேலும் மேலும் பணக்காரனானார் ஏழையோ மேலும் மேலும பரம ஏழையாயினர் ! பச்சரிசி புத்தரிசி பொங்கிலிட்ட உழவனின் வாயில் வாக்கரியியிட்டு வழி அனுப்பும் நிலை மாறணும் ! உழவர்களின் வாழ்வில் உயரம் வேண்டும் உழவனை மதிப்போம் உழவைப் போற்றுவோம்! --

கருத்துகள்