உழவன் மனம் குளிரட்டும்! கவிஞர் இரா.இரவி

உழவன் மனம் குளிரட்டும்! கவிஞர் இரா.இரவி பெட்ரோல் டீசல் விலைகளை பெருமளவு ஏற்றி வதைத்தனர் உழவனை வாழ்வாதாரம் இழந்து உழவன் இன்று வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்கிறான் உலகின் முதல் மொழி தமிழ் மொழிக்கு ஒதுக்கீடு நிதி கொடுப்பதில் ஓரவஞ்சனை வழக்கொழிந்த சமஸ்கிருத செத்தமொழிக்கு வாரி வாரி கோடிகள் விரையம் தமிழ்நாடு என்று தமிழன் உச்சரித்தால் தரணியில் சிலருக்கு எரிச்சல் வருகின்றது உரக்கச் சொல்வோம் தமிழ்நாடு என்று ஓங்கி ஒலிப்போம் தமிழ்நாடு என்று திருக்குறள் பற்றி எதுவும் அறியாதவர் திருக்குறள் பற்றி கண்டபடி உளறுகின்றார் உலகில் பிறந்த உயிர்கள் சமம் தமிழர் பண்பாடு உயிர்களில் ஏற்றத்தாழ்வு கற்பிப்பது சனாதனம் உழவனின் உன்னத வாழ்விற்கு வழிசெய்வோம் உழவனின் மகிழ்வான வாழ்விற்கு வழிவிடுவோம் உற்பத்தி செய்த நெல்லை விற்கமுடியாமல் உழவன் தவிக்கும் தவிப்பை தவிர்த்திடுங்கள் விளைவித்த நெல்மணிகளை வாங்கிடுங்கள் விவசாயி மனம் குளிர்ந்தால் நாடு குளிரும்.

கருத்துகள்