அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் இன்று மகாகவிக்கு மாலையிட்டு மரியாதை. அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் சார்பில்

அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் இன்று மகாகவிக்கு மாலையிட்டு மரியாதை. அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் சார்பில் " நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா " பாவலர் பாரதியாரின் 141 ஆவது ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு இன்று (11.12.2022) காலை 10 மணி அளவில் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள பாரதியார் அவர்களின் திருவருவச் சிலைக்கு மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் மாலை அணிவித்தார்கள். நிகழ்வில் மன்றப் புரவலர் அரிமா மகா. கணேசன், துணத் தலைவர்கள் திரு. டி.வி. அழகர், திரு. போடி காமராசு, துணைச் செயலர் திரு. லெ. முருகேசன், திரு. லெ. வெள்ளைச்சாமி, திரு. செல்வக்குமரன், சிறப்பு அழைப்பாளர்கள் கவிஞர் திரு. இரா. இரவி, வழக்கறிஞர் திரு. இராம. வைரமுத்து, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாநில துணைச் செயலர் திரு. வீர. கணேசன், திரு. கிருஷ்ணசாமி, திரு. ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

கருத்துகள்