மடல்

ரவி ஐயாவின் வலைப்பக்கங்களை படிப்பது, அணில் கடித்த கொய்யாவை, சுவைப்பதைப்போல இனிமையானது. ஒரு கவிஞன், ஒரு படைப்பாளி மட்டுமல்ல, அவனுக்குள் ரசிகன், வள்ளல் மற்றும் சமுதாயத்தை பண்படுத்த வேண்டும் என்ற அவா, கடமையணர்வால், இயக்கப்படுகிறான்....அதைப்போல, ஒவ்வொரு தலைப்பையும், அழகிய அணிகலப்பேழையில் ஒரு தாய் தன் அணிகலன்களை முறையாக, குழந்தைக்கு, அடுக்கித்தருவதைப் போல, கவிஞர் ரவி ஐயா, அரிதான, அறிவான் பல நல்ல தகவல்களை நமக்காகத் தன் வலைப்பக்கத்தில் படைக்கிறார். எனவே, எல்லோரும், குறிப்பாக இளம் தலைமுறையினர் ஒருமுறையேனும் பார்த்தால், படித்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும்....ஐயாவின் கலைப்பணி, மேலும் சிறக்க, அவர்தம் முயற்சியின் பலன் நம் தமிழ் உறவுகளைச் சென்றடைய நல்வாழ்த்துக்கள்...🙏செல்வக்குமார்

கருத்துகள்