மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி !

மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி ! எட்டயபுரத்தில் பிறந்து எட்டாத உயரம் எட்டியவன் பாரதி ! சிட்டுக்குருவிகளின் நேசன் சின்னச்சாமியின் செல்ல மகன் பாரதி ! முறுக்கு மீசைக்காரன் முத்தமிழுக்குச் சொந்தக்காரன் பாரதி ! செந்தமிழ் அன்னையின் புதல்வன் செல்லம்மாளின் அன்புக் கணவன் பாரதி ! பரங்கியர் பாரதம் விட்டு அகலக் காரணமானவன் பாரதி ! பாரதம் சிறக்க பா பல பாடி பா ரதம் செலுத்தியவன் பாரதி ! அச்சம் அறியாதவன் உச்சம் அடைந்தவன் பாரதி ! பன்மொழி அறிஞன் பண் இசைப் பாடல் யாத்தவன் பாரதி ! மற்ற மொழிகள் அறிந்திருந்தும் மட்டற்ற தமிழை நேசித்தவன் பாரதி ! கவிதை நாயகி கண்ணம்மாவை கண் முன்னே கொண்டு வந்தவன் பாரதி ! பள்ளியாசிரியராக இருந்தவன் பள்ளியின் பாடநூலில் இடம் பெற்றவன் பாரதி ! இயற்கையை ரசித்தவன் இன்பக்கவி தந்தவன் பாரதி ! பாப்பா பாடல் பாடியவன் பாப்பாக்கள் உள்ளம் நிறைந்தவன் பாரதி ! காலத்தால் அழியாத கவிதைகள் கல்வெட்டாக பதித்தவன் பாரதி ! பெண்ணுரிமை பாடியவன் பேதமையைச் சாடியவன் பாரதி ! மூடநம்பிக்கைகளை வெறுத்தவன் பகுத்தறிவைப் பயன்படுத்தியவன் பாரதி ! உடலால் மறைந்திட்ட போதும் பாடலால் என்றும் வாழ்பவன் பாரதி !

கருத்துகள்