நோபல் நாயகன் ! இரவீந்தரநாத் தாகூர் நினைவு நாள். 7.8.2022 இரவீந்தரநாத் தாகூர் ! கவிஞர் இரா .இரவி !

நோபல் நாயகன் ! இரவீந்தரநாத் தாகூர் நினைவு நாள். 7.8.2022 இரவீந்தரநாத் தாகூர் ! கவிஞர் இரா .இரவி ! மகத்தான மகாத்மா பட்டத்தை காந்தியடிகளுக்குத் தந்தவர் தாகூர் ! கற்பனைக் கடலில் மூழ்கி கவிதை முத்துக்களை எடுத்தவர் தாகூர் ! கதைகள் கேட்டு வளர்ந்தவர் கீதாஞ்சலி படைத்தவர் தாகூர் ! மாணவனாக இருந்தபோதே மட்ட ற்ற கவிதை வடித்தவர் தாகூர் ! பகுத்தறிவு இன்பச்சோலை மூட நம்பிக்கை பாலைவனம் தாகூர் போரை வெறுத்த புத்தர் பாடல் பாடிய சித்தர் தாகூர் ! அன்பின் சின்னம் பண்பின் சிகரம் தாகூர் ! உலகம் சுற்றிய கவிஞர் உலகம் போற்றும் கவிஞர் தாகூர் ! டயரின் கொடுமைக்கு சர் பட்டத்தை துறந்தவர் தாகூர் ! கவிதை கதை கட்டுரை நாடகம் வடித்திட்ட வல்லவர் தாகூர் ! மரணத்திற்கு அஞ்சாதவர் பணி முடிக்காமல் துஞ்சாதவர் தாகூர் ! இயற்கையின் இனிய நேசர் இனிய கலைகளின் தாசர் தாகூர் ! எழுதியதோடு நில்லாமல் ஏழைகளின் கண்ணீர் துடைத்தவர் தாகூர் ! உலகப் புகழ்க் கவிஞர் ஒப்பற்றக் கவிக் கடல் தாகூர் ! நோபல் நாயகன் அன்றே உலக நாயகன் தாகூர் ! உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் இரவீந்திரநாத் தாகூர் ! கவிஞர் இரா .இரவி ! கீதாஞ்சலி மூலம் கவிதாஞ்சலி வழங்கிய தாகூர் கவிஞர்களின் இலக்கணமாக வாழ்ந்துக் காட்டியவர் தாகூர் நோபல் பரிசுக்கே நோபல் பரிசுத் தந்தவர் தாகூர் நோபல் பரிசின் மதிப்பை உயர்த்தியவர் தாகூர் புகழை வெறுத்த முதல்க் கவிஞர் தாகூர் போரை வெறுத்த இரண்டாம் புத்தர் தாகூர் தாடியைக் கண்டதும் அனைவரின் நினைவுக்குத் தாகூர் தந்தை பெரியார் அடுத்து நினைவிற்கு வருவார் டயர் என்ற ராணுவ அதிகாரியின் காட்டு மிராண்டித் தனத்திற்காக சர் பட்டத்தையும் சர் என்று தூக்கி எறிந்துக் கண்டித்தவர் தாகூர் காந்தியடிகளுடன் மாணவர்கள் ஒத்துழையாமையில் வேறுபட்டாலும் காந்தியடிகளின் நெறிக் கண்டு மகாத்மா பட்டம் தந்தவர் தாகூர் தேவேந்திரநாத் தாகூரின் மகனாகப் பிறந்தார் தாகூர் பதினான்காம் குழந்தையாகக் கடைசியாகப் பிறந்தார் தாகூர் குழந்தையில் கதைகள் பலக் கேட்டு அறிவு வளர்த்து குவளயத்தில் நாவலும் நாடகமும் கவிதையும் வடித்தவர் கவிஞர் ஓவியர் நடிகர் எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றலோடு கவிதைகளில் மட்டும் தனிப்பெரும் முத்திரைப் பதித்தவர் இயற்கையை நேசிப்பதில் இயற்கையோடு ஒன்றானவர் இந்தியாவின் பெருமைகளில் ஒன்றானவர் தாகூர் குழந்தைப் பருவத்தில் பள்ளியைச் சிறையாக நினைத்தவர் குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ விடுங்கள் குரல் தந்தவர் மாலைப் பாடல்கள் எனும் முதல் நூலின் மூலம் மலை என கவிதை மாமலை என உயர்ந்த கவிஞர் தாகூர் வங்கத்து நாவல் எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியிடம் வாழ்த்தும் பாராட்டு மழையும் மலர் மாலையும் பெற்றவர் ஆடம்பரத்தை என்றும் விரும்பாத எளிமையின் சின்னம் அன்பு நெறியை அகிலத்திற்கு உணர்த்திய நல் அன்னம் தாய்மொழிப் பற்று மிக்கவராகத் திகழ்ந்தவர் தாகூர் ஆங்கில மோகம் அகற்றுக அன்றே உரைத்தவர் தாகூர் சிலை வழிபாடு வேண்டாம் என்று சொன்னவர் தாகூர் சக மதங்களைச் சாடுவது தவறு கூறியவர் தாகூர் விலங்குகள் பறவைகள் எந்த உயிருக்கும் தீங்கு இழைக்காதீர் வனங்களையும் மரங்களையும் ரசிக்க வைத்தவர் தாகூர் பிற நாட்டின் மீது பகை வளர்க்கும் தேசபக்தி பிற்போக்குத்தனமானது என்று சாடியவர் தாகூர் மூடப் பழக்கங்களை வெறுத்துப் பகுத்தறிவை நாடியவர் மூச்சாகத் தாய் மொழியை நேசிக்கச் செய்தவர் ஆங்கிலம் இத்தாலி எனப் பன்னாட்டு மொழிகளில் அகிலம் முழுவதும் பரவியது தாகூரின் படைப்பு அயல்நாடுகளில் இந்தியாவிலிருந்து வருகிறோம் என்றால் அற்புதக் கவிஞர் தாகூர் நாட்டிலிருந்து வருகிறீர்களா? என்றனர் உடலால் இவ்வுலகை விட்டு மறைந்திட்ட போதும் உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் தாகூர்

கருத்துகள்