படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.சும்மா படித்துப் பாருங்கள்.*திமுகவில் இருந்த நெடுஞ்செழியன் (சும்மா) என்ற தலைப்பில் நீண்ட நேரம் பேசினார்(மலரும்நினைவு) மேலும்படியுங்கள்* *சும்மா*

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.சும்மா படித்துப் பாருங்கள்.*திமுகவில் இருந்த நெடுஞ்செழியன் (சும்மா) என்ற தலைப்பில் நீண்ட நேரம் பேசினார்(மலரும்நினைவு) மேலும்படியுங்கள்* *சும்மா* 🤔🤔🤔 *"சும்மா ======= *இதைப் படியுங்கள். நிச்சயம் நீங்கள் அசந்துதான் போவீர்கள்!!* *உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து, இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன!* *தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறது*. *சும்மா*======= *சொல்லுவோம் தமிழின் சிறப்பை!!* *அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*. *அது சரி *சும்மா* *என்றால் என்ன??* *பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!* *"சும்மா"* ====== *என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?* *வேறு மொழிகளில்* *இல்லாத சிறப்பினை* *நாம் அடிக்கடி கூறும்* *இந்த*"சும்மா"* *எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்*. *1. கொஞ்சம்* *"சும்மா"* இருடா? (*அமைதியாக/Quiet*) *2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டுப் போகலாமே? (*களைப்பாறிக் கொண்டு/Leisurely*) *3.அவரைப் பற்றி *"சும்மா"* *சொல்லக் கூடாது!* (அருமை/in fact)* *4.இது என்ன *"சும்மா கிடைக்கும்னு* நினச்சியா*? (இலவசமாக/Free of cost) *5. *"சும்மா" கதை அளக்காதே?* (பொய்/Lie) *6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்* - (உபயோகமற்று*/Without use) *7. *"சும்மா"* *"சும்மா" கிண்டல் பண்ணுறான்.* (அடிக்கடி/Very often)* *8.இவன் இப்படித்தான்.. *சும்மா* *சொல்லிக்கிட்டு இருப்பான்*. (எப்போதும்/Always) *9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்*- (தற்செயலாக/Just) *10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது* (காலி/Empty) *11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.* (மறுபடியும்/Repeat) *12.ஒன்றுமில்லாமல் *"சும்மா" போகக் கூடாது*- (வெறுங் கையோடு/Bare) *13. *"சும்மா"தான் இருக்கின்றோம்*- (சோம்பேறித் தனமாக/ Lazily) *14.அவன் *"சும்மா" ஏதாவது உளறுவான்* - (வெட்டியாக/idle) *15.எல்லாமே *"சும்மா" தான் சொன்னேன்*- (விளையாட்டிற்கு/Just for fun) *நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"* *என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது *"சும்மா"* இல்லை!) *சும்மா. வாவது சிந்தித்தீர்களா இதனை..?* *உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை*. *ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்* இந்த *சும்மா* *என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்குப் பிடித்து இருந்தால் *சும்மா* ஒரு *Forward* *பண்ணுங்க* 🙏🌱இராம.ஞானவேல்🌱🙏

கருத்துகள்