படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. *" இன்றைய சிறுகதை "*

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. *" இன்றைய சிறுகதை "* *_📌குறிப்பு : கதைகள் படித்தவர்கள் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் சொல்லி மகிழுங்கள்._* _✍பகிர்வு_ *ஸ்ரீ* *" பிஞ்சு மூளையில் உதித்த அறிவு "* அறிவின் அறியாமை ஒரு பள்ளி ஆசிரியர் வண்ணப் புத்தகத்தில் யானையின் படத்தை வரைந்து கொண்டு வந்து, அதை சுட்டிக் காட்டி “இது என்ன?” என்று மாணவர்களைக் கேட்டார். சின்னக் குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியான குரலில் “யானை!”, “யானை!” என்றார்கள். அவர்களை பாராட்டி விட்டு அடுத்த வகுப்பை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சின்ன குழந்தையின் அறிவு ஆசிரியரின் அறிவை அறியாமையாக்கியது. ஒரே ஒரு சின்ன குழந்தை எழுந்து, “ஐயா, அது யானை அல்ல… யானையின் படம் என்றது”. ஐம்பது வயது மூளை அப்படியே அமைதியாகி போனது! உண்மை தானே. பிஞ்சு மூளையில் உதித்த அறிவு தமது அறியாமையை ஆசிரியருக்கு உணர்த்தியது. “படிப்பாலும் கல்வியறிவாலும் வருகிற அகங்காரம் இருக்கிறதே அது அழியாது! இந்த அறிவு வெறும் அறியாமை என்று அடுத்தவர் அறிவால் அடிவாங்கினால் ஒழிய, இது ஒழியாது”. ஆகையால் நாம் இந்த‌ துன்ப‌த்திற்கு ஆளாகாம‌ல் அகங்கார‌ம் இன்றி வாழ்ந்திடுவோம்!

கருத்துகள்