உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !

உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி ! உணவு இன்றியும் சிலநாள் வாழலாம் உன்னத நீர் இன்றியும் சிலநாள் வாழலாம் ! ஒப்பற்ற காற்று இன்றி சில நிமிடங்கள் கூட உயிர்கள் வாழவே முடியாது உலகில் ! காற்றுக்காக இந்தியாவே அல்லாடியது காற்று இன்றி உயிர்கள் பல பிரிந்தது !  காற்றின் முக்கியத்துவத்தை இப்போது கொடிய கொரோனா உணர்த்திவிட்டது ! மனிதன் மட்டுமல்ல உயிரனங்கள் வாழ முக்கியத்  தேவை காற்றே ஆகும் ! காற்று  உருவமற்றது உயிர் வாழ உதவும் காற்று உயிர் இரண்டுக்கும் உருவம் இல்லை ! காற்று நின்றால் மூச்சு நின்று விடும் காற்றே அனைத்திற்கும் ஆதாரமாகும் ! பஞ்ச பூதங்களில் மிகவும் பயன்மிக்க பூதம் காற்று என்றால் மிகை இல்லை !  .மரம் நடுவோம் மழை பெறுவோம் முக்கிய காற்றுக்கும் முக்கியம் மரம் ! மரம் நடுவதை கடமையாக் கொள்வோம் மரங்கள் வளர்த்தால் காற்று வரும் !  காற்றை கண்ணால்  காண முடியாது காற்றை அணைவும் உணர முடியும் ! உயிர் வாழ உதவிடும் உன்னதக் காற்றை உயிரென மதித்து என்றும்  போற்றிடுவோம் !

கருத்துகள்