படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! தந்தை பெரியார்*

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! தந்தை பெரியார்* *90-வது வயதில் _ 180 கூட்டம்.* *91-வது வயதில் _ 150 கூட்டம்.* *93-வது வயதில் _ 249 கூட்டம்.* *94-வது வயதில் _ 229 கூட்டம்.* *வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 42 கூட்டம்.* *இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்...* *ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்...* *சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்...* *இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?* *எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ?* *அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா?* *மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ?* *நான் சொல்வதை கேட்டால் தான்* *உனக்கு சொர்கம்;* *என்னை வணங்காவிட்டால் நரகம்* *என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்...* *நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்,* *யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன்💙 அறிவைக்கொண்டு, அனுபவத்தைக் கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன ஒரே தலைவர் இவர் மட்டுமே...*

கருத்துகள்