ஆசிரியர் : முது முனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347

ஆசிரியர் : முது முனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347 பதவி மட்டுமே முக்கியம் என்று ஆராதிக்கும் சமூகத்தில் மனிதம் மரித்துப் போகிறது. * பணி என்பது ஜீவனத்திற்கான வரைபடம். * ஒட்டி இருப்பவை அனைத்தும் உதிர்ந்துவிடக் கூடியவையே. உதிராதவற்றால் அடையாளம் காணும் நாள் எப்போது வரும்! * குறிப்பறிந்து பணியாற்றுவதை மேற்கொள்பவர்கள் குறிக்கோள் தவறாமல் இலக்கை அடைவார்கள். * உடல்மொழியை அறிவது அந்நிய நாட்டின் தாய்மொழியை அறிவதைவிட முக்கியம். * எங்கெல்லாம் மக்களிடம் சுற்றுலா நட்பு மனப்பான்மை இருக்கிறதோ, அங்குதான் சுற்றுலா கொடிகட்டிப் பறக்கிறது. * தன் இனத்தைவிட மனிதர்களை நேசிக்கும் மகத்தான பண்பு நாய்களுக்கே உண்டு. * நிறைய யோசித்தால் முடிவெடுக்க முடியாமல் போய்விடும். * எதுவும் முழுமையாக இருக்க முடியாது என்பதையே இயற்கை நமக்கு உணர்த்துகிறது.

கருத்துகள்