ஆசிரியர் :--முதுமுனைவர் வெ.இறையன்பு. நூல் தலைப்பு :--செய்தி தரும் சேதி வெளியீடு :--தினத்தந்தி பதிப்பகம், போன் :044-25303336 / 25303000

ஆசிரியர் :--முதுமுனைவர் வெ.இறையன்பு. நூல் தலைப்பு :--செய்தி தரும் சேதி வெளியீடு :--தினத்தந்தி பதிப்பகம், போன் :044-25303336 / 25303000 சமூக நுண்ணறிவு இருப்பவர்கள் சுமுகமாக வாழ்கிறார்கள். அறிந்ததை ஆவணப்படுத்துவதும், அறியாதவற்றில் ஆர்வம் கொள்வதும் மனித இயல்பு. * உன்னிப்பாகப் பார்த்தால் செய்தித்தாளில் உலகமே அடங்கியிருக்கிறது. அதில் சர்வதேசச் செய்திகள், தேசச் செய்திகள், மாநிலச் செய்திகள், மாவட்டச் செய்திகள் என்று 'குளோசப்' காட்சியாய் அனைத்தும் பார்வைக்குப் படுகின்றன. * தமிழ் இலக்கியத்தில் வீசும் திசையைப் பொறுத்து காற்றுக்குப் பெயர் வைத்தார்கள். தெற்கில் வீசினால் தென்றல், வடக்கிலிருந்து வீசினால் வாடை கிழக்கில் கொண்டல், மேற்கில் கோடை. * பாலைவனத்தில் எழும் சூறாவளி உடலின் துவாரங்கள் அனைத்திலும் மண்ணைத் தூவும். * புயலுக்குப் பின் இயற்கையில் அமைதி இருக்கலாம்; ஆனால் இதயத்தில் இருப்பதில்லை. * ஓரிடத்திலேயே எப்போதும் தங்கிவிடுபவர்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் சரிந்துவிடுவார்கள். பறந்து திரிகிறவர்களே, பயணம் செல்பவர்களே புயலையும் அனுசரித்துப் புவியை ஆள்வார்கள். * எது வேகமாக வளர்கிறதோ அது வேகமாக விழும் என்பதையே இந்த அந்நிய மரங்கள் நமக்குச் சொல்லும் கண்ணியமான சேதி. * மரங்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதம் மட்டுமே மரத்துப்போய் இருக்கிறது. * மனிதர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்தும் நாம் மரங்களுக்காகவும் செலுத்துவோம்.

கருத்துகள்