மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி !மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி !

அங்கத்தில் குறை இருந்தாலும்
அகத்தில் குறை இல்லாதவர்கள் !
உடலில் குறை இருந்தாலும்
உள்ளத்தில் குறை இல்லாதவர்கள் !
நடக்க முடியாவிட்டாலும் சோராதவர்கள்
பேச முடியாவிட்டாலும் பேதலிக்காதவர்கள் !
பார்க்க முடியாவிட்டாலும் அசராதவர்கள்
கேட்க முடியாவிட்டாலும் வருந்தாதவர்கள் !
கைகள் இல்லாவிட்டாலும் கலங்காதவர்கள்
குறைகள் கண்டு கரையாதவர்கள் !
நான்கு சுவருக்குள் சுருங்காதவர்கள்
நான்கு திசைகளும் செல்வர்கள் !
இல்லாததற்காக என்றும் வருந்தாதவர்கள்
இருப்பதை செம்மையாக்கும் திறனாளர்கள் !
வாய்ப்புகள் வழங்கினால் ஒளிர்வார்கள்
வசதிகள் ஏற்படுத்தினால் வளர்வார்கள் !
குறையையும் நிறையாக எண்ணுபவர்கள்
குறைக்காக என்றும் வருந்தாதவர்கள் !
பரிசுகளும் பதக்கங்களும் பெறுபவர்கள்
பலரின் பாராட்டுக்கு உரியவர்கள் !
எக்குறையும் இல்லாதோர் சிலர்
எவ்வேலையும் செய்யாமல் உளர் !
உடற்குறை இருந்தபோதும் பலர்
ஓடி ஓடி உழைப்போர் உளர் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !