நூலகம் ! கவிஞர் இரா .இரவிநூலகம் ! கவிஞர் இரா .இரவி

அகம்
தூய்மையகம்
நூலகம் !

அறிவு வளர்க்கும்
அற்புத இடம்
நூலகம்  !

பண்பாடுப் போதிக்கும்
பயனுள்ள இடம்
நூலகம்  !

அறவழிப்படுத்தும்
அழகிய இடம்
நூலகம்  !

அறிவாளிகள் இருக்கும்
அறிவார்ந்த இடம்
நூலகம்  !

அமைதிப் படுத்தி
மதி வளர்க்கும் இடம்
நூலகம்  !

விலைமதிப்பற்ற நூல்களின்
வசிப்பிடம்
நூலகம்

மறைந்த தலைவர்கள்
மறையாமல் வாழுமிடம்
நூலகம்  !

புரட்டப் புரட்ட
புத்திப் புகட்டுமிடம்
நூலகம்  !

எடுத்துப் படிக்க
இனிமை கூட்டுமிடம்
நூலகம்

வயது பேதமின்றி
வாசகரை உயர்த்துமிடம்
நூலகம்  !

சாதி மத பேதமின்றி
சமத்துவம் கற்பிக்குமிடம்
நூலகம்  !

அரசுப்பணி ஆட்சிப்பணி
கிடைக்கக் காரணம்
நூலகம்  !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்