ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

இறந்த பின்னும்
இருவருக்குப் பயன்படுமே
விழிக்கொடை !
மண்ணுக்கும் தீக்கும்
இரையாகும் விழிகளை
மனிதனுக்கு வழங்குகள் !
இறந்த பின்னும்
இவ்வுலகை இரசிக்க
கண் தானம் !
குஞ்சுகள் மிதித்து
கோழிகள் காயம்
முதியோர் இல்லம் !
வேண்டாம் மூடநம்பிக்கை
வேண்டும் தன்னம்பிக்கை
வெற்றி உன் கை !
பிஞ்சு நெஞ்சங்களில்
நஞ்சு விதைப்பு
ஊடகங்கள் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்