படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

மருத்துவரும் பொறியாளரும் நாங்கள்
விளைவித்த உணவைத்தான் உண்ண வேண்டும் !

விவாசாயத்தை மதிக்கும் நாங்கள்
விவரமில்லாதவர்கள் அல்ல விவரமானவர்கள் !

உழுதால்தான் சோறு கிடைக்கும் இதை
உணர்ந்தால்தான் நாடு செழிக்கும் !

வாழ்வான் சொன்னான் உழவரைத் தொழ
வாழ்க்கை வெறுக்க வைத்தது நியாயமா !

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
ஐந்தில் வளைத்து விவசாயம் செய்கிறோம் !

வாக்களித்த உழவனுக்கு நீங்கள்
வாக்கரிசி போடலாமா ?

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்