போட்டிக்கு அல்ல . படத்திற்கு நான் எழுதிய ஹைக்கூ ! கவிஞர் இரா இரவி !

போட்டிக்கு அல்ல .
படத்திற்கு நான் எழுதிய ஹைக்கூ ! கவிஞர் இரா இரவி !

கிளிகள் இணையாக 
கன்னி தனியாக 
காளை வரவு எப்போது ?

வழி மேல் விழி வைத்து 
வஞ்சி காத்திருக்கிறாள் 
தலைவன் வருகைக்கு !

பண்பாட்டு ஆடை அணிந்து 
பாதையில் பார்வை வைத்து 
பாவை காத்திருக்கிறாள் !

பேசுகின்றன கிளிகள் 
கேட்கின்றன செவிகள் 
விழிகள் வழி நோக்கி !

விழிகளின் வழி
வழங்குகிறாள் மின்சாரம் 
பாதிப்பில் வாலிபர்கள் ! 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்