பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு. பரிதியின் பார்வை! கவிஞர் இரா. இரவி



பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு.

பரிதியின் பார்வை!
கவிஞர் இரா. இரவி
பரிதியின் பார்வை என்றும் பாரபட்சமற்றது
பரிதியின் ஒளியின்றி உலகம் இல்லை !

ஓய்வு என்றால் என்னவென்று அறியாதவன் பரிதி
உலகத்தோர் யாவரையும் சமமாய் மதிப்பவன் பரிதி !

பரிதியின் பார்வையால் தாமரை மலரும்
பரிதியின் வருகையால் சேவல் கூவும் !

பரிதியின் பார்வையால் வருவது பகல்
பரிதியின் பார்வையற்ற போது வருவது இரவு !

உயிரினங்கள் உயிர்வாழக் காரணம் பரிதி
உயர்ந்த மரம் செடி கொடி வளர்ந்திடப் பரிதி !

நார்வே நாட்டை மட்டும் எப்போதும் பார்ப்பதால்
நார்வேயில் தோன்று
வதில்லை என்றும் இரவு !

பரிதியின் பார்வையில் உருவாகும் மேகமே
பாரினில் மழையாகப் பொழிந்து வருகின்றது !

பரிதியின் பார்வையால் வருவதே நிலவின் ஒளி
பரிதியின்றி நிலவிற்கு ஒளி இல்லை !

பரிதியை வணங்கி விட்டுத்தான் எல்லோரும்
பாரதத்தில் யோகா உடற்பயிற்சி செய்கின்றனர் !

கோடையில் பார்வை கொடூரமான போதும்
குன்றுகளில் மரங்கள் வளர்வதும் பரிதியால் தான் !

பரிதி சுற்றுவதே இல்லை நிலைத்து நிற்கும்
பரிதி சுற்றுவது போலத் தோன்றுவது மாயை !

இருந்த இடத்தில் நிலையாக நிற்கும் பரிதி
இந்த உலகின் மாற்றமில்லாத ஒன்று பரிதி !

பூமி சுற்றுவதால் தான் உண்டாகுது இரவு பகல்
பரிதி சுற்றுவதாகத் தவறான புரிதல் உண்டு !

திங்கள் செவ்வாய் கிரகங்கள் ஆராய்ந்த போதும்
தரணியில் ஆராய நெருங்க முடியாதது பரிதி !

சூரிய நாராயண சாஸ்திரி எனும் பெயரை
பரிதிமாற்கலைஞர் என்று மாற்றினார் தமிழறிஞர் !

பரிதி  என்ற  சொல் பலருக்கும் பிரபலமானது 
பரிதியைப் பிரபலப்படுத்திய பாவாணர் பாட்டரங்கிற்கு நன்றி !


.

கருத்துகள்