வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை ;பேரா. சு. கோவிந்தராசன் நூல் மதிப்பீடு : ஊற்று – ஜூன் 2017 பெங்களூருத் தமிழ்ச் சங்க மாத இதழ் !





வெளிச்ச விதைகள் !நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
மதிப்புரை ;பேரா. சு. கோவிந்தராசன்
நூல் மதிப்பீடு : ஊற்று – ஜூன் 2017
பெங்களூருத் தமிழ்ச் சங்க மாத இதழ் !

வெளியீடு : வானதி பதிப்பகம், சென்னை-17.

விலை : ரூ. 120 முதற்பதிப்பு : டிசம்பர் 2016
*****
      ஹைக்கூ கவிஞர் இரா. இரவி அவர்கள் தமிழுக்காக, தமிழர் நலனுக்காக இணையதளத்தை இடைவிடாமல் பயன்படுத்தி வருபவர்.  சுற்றுலாத் துறையில் பணிபுரிந்தாலும், அயலகத் தமிழர்க்காகவும் குரல் கொடுத்து வருபவர்.

      வானதி பதிப்பகத்தின் வழி ஐந்தாம் நூலாக வெளிவந்துள்ள ‘வெளிச்ச விதைகள்’ என்ற நூலுள் 1. உறவுகளின் மாண்பு, 2. தமிழ், தமிழ், தமிழ்நாடு, 3. சமூகப்பதிவுகள், 4. இயற்கைச் சித்தரிப்பு, 5. தன்னம்பிக்கை முனை, 6. காதல் உலகு, 7.  நாட்டு நடப்பு, 8. சான்றோர் அலைவரிசை, 9.  உதிரிப்பூக்கள் ஆகிய தலைப்புகளில் பல்வேறு கவிதை மலர்களை மாலையாக்கித் தந்துள்ளார்.

      இரவி நிறைய ‘ஹைக்கூ’ எழுதுவார் , முற்போக்குச் சிந்தனையாளர் ; சுறுசுறுப்பாக இயங்குவார்’ என முதுமுனைவர் வெ. இறையன்பு, ஐ.ஏ.எஸ். அவர்களாலும், ‘இரவியின் நெஞ்சம் திறப்போர் அங்கு ஹைக்கூ கவிதை’ கொலுவிருக்கக் காரணம் எனத் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களாலும் பாராட்டப் பெற்றுள்ள கவிஞர் இரவி அவர்கள் 16 நூல்களை இயற்றி இலக்கிய வானில் கொடிகட்டிப் பறக்கிறார்.

      எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், கவியரங்கத் தலைவர் எனப் பன்முகம் கொண்ட கவிஞர் அவர்கள் வெளியிட்டுள்ள ‘வெளிச்ச விதைகள்’ என்ற கவிதைத் தொகுப்பு நூல் இன்றைய இளைஞர்களுக்கும். வளரும் சமுதாயத்திற்கும் வெளிச்சத்தைக் காட்டும் விதைகளாக அமைந்து, உணர்ச்சியுடன் கருத்துக்களைத் தந்துள்ளார். இவர் மேலும் நூல்களை எழுதி வெளியிடச் சங்கம் பாராட்டி வாழ்த்துகிறது.

      நூலின் உள்ளே சென்றால் வெளிச்சத்தைத் தரும் விதைகளின் சிறப்பை உணர்ந்து மகிழ்வீர்கள்!  நீங்களும் சுவைத்துப் பாராட்டுங்கள்.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்