பெங்களூரு பாவாணர் பாட்டரங்கில் தந்த தலைப்பு : தந்தை சொல் ! கவிஞர் இரா. இரவி



பெங்களூரு பாவாணர் பாட்டரங்கில் தந்த தலைப்பு :

தந்தை சொல் !
கவிஞர் இரா. இரவி
*******
தந்தை சொல் ஆரம்பத்தில் கசப்பாக இருக்கும்
பின் தானாகப் புரியும் சொல்லில் இருக்கும் மகத்துவம் !

மகனின் முன்னேற்றத்திற்காக அறிவுரை வழங்குவார்
மகன் கேட்டு நடந்தால் வாழ்வில் சிறப்பான் !

மகனின் நலன் கருதியே எதுவும் கூறுவார்
மகன் புரிந்து நடந்தால் முன்னேற்றம் காணுவான் !

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்றனர்
தந்தை சொல் மதிக்க மனமில்லை பல மகன்களுக்கு !

தந்தை சொல் கேளாமல் திரிந்து வாழ்க்கையில்
தடுக்கி விழுந்து பாடம் கற்றவர்கள் பலர் !

முதலில் கசக்கும் பின்பு இனிக்கும் என்றும்
மூத்தோர் சொல் என்பதை இளையோர் புரிந்திடல் வேண்டும் !

தவறான வழியில் என்றும் செல்லாதே என்று
தந்தை அறிவுரை வழங்கினால் கேட்டிட வேண்டும் !

தீய நட்பு வேண்டாமென்று எச்சரிக்கை செய்வார்
தீய நட்பு வெட்டிவிட்டால் வாழ்க்கை சிறக்கும் !

கெட்ட பழக்கங்கள் வேண்டாமென்றால் மகன்
கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பது சிறப்பு !

கல்வியை விட ஒழுக்கம் உயர்ந்தது என்று
கனிவோடு தந்தை சொல்வதை கேட்பது சிறப்பு !

வீணாகச் சுற்றித் திரிந்து பொன்னான நேரத்தை
வீணாக்காதே என்றால் கேட்டு நடப்பது சிறப்பு !

அனுபவம் மிக்க தந்தை கூறும் சொற்கள்
அவனியில் விலை உயர்ந்த நல்ல வைரக்கற்கள் !

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை
தாரக மந்திரமாகக் கொண்டு நடந்தால் தோல்வியே இல்லை !

கருத்துகள்