ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மாட்டிடம் காட்டும் பாசத்தை
கொஞ்சம் காட்டுங்கள்
மனிதனிடம் !

விளம்பரத்தில்   போய்
ஆறு அறிவாம்
இரும்புக்கம்பிக்கு !

தூக்கம்
நிரந்தரமானால்
துக்கம் !

துக்கம்
துப்பாக்கிக்குண்டுகள் பரிசு
உழவர்களுக்கு !

உத்திரவாதமில்லை
உயிருக்கு
மீனவர்களுக்கு !

தீர்வு அல்ல
தீங்கு
வன்முறை !

ஒழுங்கு கற்பித்தன
வரிசையாகச் செல்ல
எறும்புகள் !

நாடுகள் கடந்தன
கடவுச்சீட்டுகள் இன்றி
பறவைகள் !

அறிந்தது முகரந்ததும்
பசுவின் கர்ப்பம்
தீண்டவில்லை காளை !

பெயரால்   மட்டுமல்ல
உண்மையில் பெரியார்
பெரியார் !

அடுக்கு மொழியால்
அள்ளியவர் உள்ளங்களை
அறிஞர் அண்ணா !

பொதுவுடைமையானது
கல்வி
காமராசர் !

முன்னவரும் இல்லை
பின்னவரும் இல்லை
கலாமிற்கு இணை !நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !