ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

கற்றது கையளவு 
கல்லாதது உலகளவு 
கணினியில் !

கடைவிரித்தேன் 
கொள்வாரில்லை 
புதிய கட்சிகள் !

அடுக்குமாடி குடியிருப்பு 
தேவை கவனம் 
தீ !

வழிமொழிந்தனர்
உலக மொழி ஆய்வாளர்கள் 
உலகின் முதல்மொழி தமிழ் !

மீனவர்களின் 
அட்சயப்பாத்திரம் 
கடல் !  

தேசப்பிதா சூரியன் 
பெயரில் மலர் 
சூரியகாந்தி !

வேண்டும் வேண்டாம் 
நடக்குது பட்டிமன்றம் 
ஆதார் அட்டை !

அழைக்க வேண்டினாள் 
செத்த பிணமென்று 
அம்மா !

முயலுங்கள் குறைத்திட 
எரிபொருள் விலையேற்றம் 
எரியுது மனம் !

சிறைச்சாலையும் 
கல்விச்சாலையே 
கற்பித்தது பாடம் !

மூன்று பக்கம் கடலால் 
நான்கு பக்கம் கடனால் 
சூழ்ந்தது இந்தியா !

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !