ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ  ! கவிஞர் இரா .இரவி !

சுமையான போதும் 
பாதுகாப்பு 
நத்தையின் கூடு !
சேற்றில் மலந்தும் 
ஒட்டவில்லை சேறு
செந்தாமரை !
குரல்   இனிமை 
குயில்
நிறம் கருமை !
அடைகாக்கா அறியாவிடினும் 
காக்காவின் தயவில் பிறப்பு 
குயிலினம் !
நம்பமுடியாத உண்மை 
மானை விழுங்கும் 
மலைப்பாம்பு !
இனிமைதான் 
ரசித்துக் கேட்டால் 
தவளையின் கச்சேரி  !
இனிய அனுபவம் 
நனைந்து பாருங்கள் 
மழை !
மழையில் நனைந்தும் 
கரையவில்லை வண்ணம் 
மயில் தோகை !
நிலா வேண்டி 
அழும் குழந்தை 
அமாவாசை !
முதல் மாதம் கனமாக 
கடைசி மாதம் லேசாக 
நாட்காட்டி !
மீண்டும் துளிர்த்தது 
பட்ட மரம் 
மனிதன் ?
தோட்டம் அழித்து
கட்டிய வீட்டில் 
செயற்கை  மலர்கள்
பாடுவதில்லை 
நாற்று நாடுவோர் 
பண்பலை வானொலி !
ரேகை  பார்த்தது ஈசல் 
சொன்னார் சோதிடர்
ஆயுசு நூறு !
மணி  காட்டாவிட்டாலும் 
மகிழ்ச்சி தந்தது 
மிட்டாய் கடிகாரம் !
.

கருத்துகள்