உலகுக்கு உணவு தரும் உன்னத உழவர்கள் ! கவிஞர் இரா .இரவி !
உலகுக்கு உணவு தரும் உன்னத உழவர்கள் !
கவிஞர் இரா .இரவி !


உலகுக்கு உணவு தரும் உன்னத உழவர்கள்
உலகம் உணரவில்லை அவர் தம் பணிகள் !

வெயில் என்றும் மழை எனறும் பாராது
வாடி வதங்கி நிலத்தில் விளைவிக்கின்றனர் !

மனிதர்களின் உயிர் வளர்க்கும் அட்சயப்பாத்திரங்கள்
மண்ணில் உயிர் வெறுத்து மாய்த்து மடிகின்றனர் !

விவசாய நிலங்களை வெளிநாட்டவருக்கு விற்கின்றனர்
வாழ வழியின்றி விவசாயிகள் சாகின்றனர் !

மண்ணின் மைந்தர்களுக்கு மண் சொந்தமில்லை
மேல் நாட்டவரின் பணத்தால் வந்தது தொல்லை !

நிலத்தடி நீரை உறிஞ்சி கோடிகளை குவிக்கின்றனர்
நிலத்திற்கு நீர் பாய்ச்சிட இன்றி விவசாயிகள் துடிக்கின்றனர் !

கடலில் வீணாக கலக்கும் நீரை தர மறுக்கின்றனர்
கண் கலங்கி பயிர்வாட விவசாயிகள் வாடுகின்றனர் !

மரபணு விதைகள் என்று மலட்டு விதைகள் தருகின்றனர்
மறு விவசாயத்திற்கு பயன்படாததை விற்கின்றனர் !

பூச்சி மருந்து பூச்சியை விட விவசாயிகளையே கொல்கின்றது
உரத்தின் விலையோ விவசாயிகளின் சக்தியை குறைக்கின்றது !

விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்றனர் அன்று
விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கின்றனர் இன்று !

விளை நிலங்களில் எல்லாம் வீடுகள் கட்டுகின்றர்
விரைவில் உணவுத்தட்டுப்பாடு உலகிற்கு வரும் !

விவசாயி தழைத்தால் விவசாயம் தழைக்கும்
விவசாயம் தழைத்தால் உலகம் தழைக்கும் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்