புல்லாங்குழல் ! கவிஞர் இரா .இரவி !

புல்லாங்குழல் !    கவிஞர் இரா .இரவி !

தீக்காயம் பட்ட போதும்
வருந்தவில்லை
புல்லாங்குழல் !

காற்றை இசையாக்கும்
வித்தகக் கருவி
புல்லாங்குழல் !

மவுனமாகவே இருக்கும்
காற்றுத் தீண்டும் வரை
புல்லாங்குழல் !

உருவில் சிறியது
உணர்வில் பெரியது
புல்லாங்குழல் !

காட்டில் விளைந்து
காதோடு உறவாடும்
புல்லாங்குழல் !

தீயால் துளைத்தபோதும்
இசை நல்கும்
புல்லாங்குழல் !

இதழ் குவித்து விரல் பதித்து
காற்றுத் தந்ததும் இசைக்கும்
புல்லாங்குழல் !

அன்று முதல் இன்று வரை
அற்புத இசை
புல்லாங்குழல் !

எம்மொழியும் சம்மதம்
இனிய இசைப் பிறக்கும்
புல்லாங்குழல் !

கானம் இசைத்து
கவலைப் போக்கும்
புல்லாங்குழல் !

பல இசையிலும்
தனித்துக் கேட்கும்
புல்லாங்குழல் !

விழிகள் மூடி செவிகள் திறந்தால்
தேன் பாயும்
புல்லாங்குழல் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்