தன்னம்பிக்கை ! கவிஞர் இரா .இரவி !





தன்னம்பிக்கை !   கவிஞர் இரா .இரவி !

வாழ்க்கைத் தத்துவம்
யானைக்குத் தும்பிக்கை
மனிதனுக்கு தன்னம்பிக்கை!

இமயம் செல்லலாம்
இரு கால்களும் இன்றி
தன்னம்பிக்கை இருந்தால் !

முடியாதது முடியும்,
நடக்காதது நடக்கும்
தன்னம்பிக்கை இருந்தால்…!

தாழ்வு மனப்பான்மையைத்  தகர்த்து
தன்னம்பிக்கையை நிறுத்து
வெற்றி பெற !

வெற்றியை
வெறியோடு சாதிக்க
துணை தன்னம்பிக்கை !

வயது தடையல்ல!
எந்த வயதிலும்
புரியலாம் சாதனை !

உடல் ஊனம்
அகற்றிடும்
தன்னம்பிக்கை !

உள்ளத்து ஊனம்
தகர்த்திடும்
தன்னம்பிக்கை !

குறைந்த காரணத்தால்
மலிந்தது குற்றங்கள்
தன்னம்பிக்கை !

உருவம் இல்லாத உறுப்பு,
உள்ளத்தில் இருப்பதே சிறப்பு
தன்னம்பிக்கை !

இழந்தவன் வீழ்வான்
இருப்பவன் வெல்வான்
தன்னம்பிக்கை !

தென்னைக்குத் தெரியாது
இளநீரின் சுவை
திறமையறியா இளைஞர்கள் !

மனதில் தீ வேண்டும்,
திட்டமிட வேண்டும்
புரியலாம் சாதனை !

கருத்துகள்