"நமது மண்வாசம்" மாத இதழின் 3-வது ஆண்டு தொடக்கவிழா 3.5.2017.இன்று நடைபெற்றது.

பத்திரிக்கை சுதந்திரநாளில் நமது மண்வாசம் மாத இதழ் 3-வது ஆண்டு தொடக்கவிழா தானம் அறக்கட்டளையின் பட்டறிவு பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படும் "நமது மண்வாசம்" மாத இதழின் 3-வது ஆண்டு தொடக்கவிழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு திரு. M.P. குருசாமி காந்தி மியூசிய செயலாளர் தலைமை வகித்தார். முன்னிலையாக களஞ்சிய இயக்கத் தலைவி திருமதி. சின்னப்பிள்ளை, நிர்வாக இயக்குநர் M.P. வாசிமலை மற்றும் சிறப்பு பேச்சாளராக பேராசிரியர் திரு. கு. ஞானசம்பந்தன் பேசினார்.

விழாவில் வாழ்வியல் விதைகள் புத்தகத்தை பேராசிரியர் திரு. கு. ஞானசம்பந்தன் வெளியிட களஞ்சிய இயக்கத் தலைவி திருமதி.சின்னப்பிள்ளை மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.

நாமும் நலமும், புத்தகத்தை திரு. திரு. M.P. குருசாமி வெளியிட தானம் அறக்கட்டளை, சுகம் திட்டத் தலைவர் திரு. ராஜபாண்டியன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.

நமது மண்வாசம் 25-வது மாத இதழை பேராசிரியர்கள் திரு. கு. ஞானசம்பந்தன் மற்றும் திரு. M.P. குருசாமி அவர்கள் வெளியிட அறிஞர் பலர் பெற்றுக்கொண்டனர். விழாவில் சுமார் 300 வாசகர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய முடிவாக இனிவரும் காலத்தில் விற்பனை பிரதியை 25,000-ல் இருந்து 50,000-மாக உயர்த்த வாசகர்களிடம் கூறப்பட்டது. வாசகர் வட்டம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதழின் ஆசிரியர் திருமலை மற்றும் ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். பட்டறிவு அலுவலர் திரு. கிருஷ்ணமூர்த்தி அனைவருக்கும் நன்றி பாராட்டினார்.

விழா முடிவில் தனிப்பாடல் திரு. பால்பாண்டியன் பாட நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.


நிகழ்ச்சியினை தங்களுக்கு செய்தித்தொகுப்பாக புகைப்படத்துடன் அனுப்பியுள்ளோம்.

இதை தங்களது பத்திரிக்கையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

P. வாசுநாதன்
ஊடக ஒருங்கிணைப்பாளர்
தானம் அறக்கட்டளை
மதுரை
9791525231
கருத்துகள்

பிரபலமான இடுகைகள்