பாவேந்தர் ! கவிஞர் இரா .இரவி !
பெங்களூரு ஐ .டி.ஐ . தமிழ்மன்றத்தில் 9.4.2017 அன்று நடந்த 164 வது பாவாணர் பாட்டரங்கில்,  2 நிமிட உடனடி கவிதை போட்டி நடந்தது."பாவேந்தர்" என்ற தலைப்பு தரப்பட்டது. இப்போட்டியில் மூன்றாம் பரிசுப் பெற்ற கவிஞர் இரா .இரவி கவிதை !


நடுவர் நாவல் ஆசிரியர் எழுத்தாளர் திருமதி ஜெயசக்தி !

பாவேந்தர் !    கவிஞர் இரா .இரவி !

பாவேந்தர் பட்டத்திற்கு முற்றிலும் 
பொருத்தமானவர் பாரதி தாசன் !

கனக சுப்புரத்தினம் என்ற பெயரை 
குரு பாரதிக்காக பாரதிதாசனாக மாற்றியவர்!

குடும்பக்கட்டுப்பாடு பற்றி அன்றே
குமுகத்திற்குச் சொன்ன முதல் கவிஞர் !

பகுத்தறிவுப் பகலவன் கருத்துக்களை 
பாடலில் வடித்த போர்முரசு  !

புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர் 
புரட்சிப் பாடல்கள் வடித்த சித்தர் !

குடும்பவிளக்கு  இயற்றி வைத்து 
குடும்பங்களை ஒளிர விட்டவர் !

புரட்சிக்கு கவிஞர் படத்திற்கு 
பொருத்தமானவர் நமது பாவேந்தர் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்