படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வானம்  பார்த்த பூமி
பொய்த்தது வானம்
வெறுப்பில் விவசாயி !

தண்ணீர் கிடைக்கவில்லை
வெடித்தது பூமி
உடைந்தது மனம் !

ஈரப்பசை இருந்தால்தான்
உழுவதற்கு  முடியும்  !

பக்கத்துக்கு  மாநிலத்தாருக்கு
ஈரமில்லை நெஞ்சில்
வழியில்லை விவசாயத்திற்கு  !

வெடித்தது
பூமி மட்டுமல்ல
உழவனின் இதயமும்தான் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்