கவிஓவியா - ஆசிரியர் கேள்வி ;வாசகர் பதில் ! கேள்வி ;தமிழக விவசாயிகளின் இன்னல் தீர்க்க என்ன வழி ? வாசகர் கவிஞர் இரா .இரவி பதில் ;

கவிஓவியா - ஆசிரியர் கேள்வி ;வாசகர் பதில் !

கேள்வி ;தமிழக விவசாயிகளின் இன்னல் தீர்க்க என்ன வழி ?   
வாசகர்  கவிஞர் இரா .இரவி பதில் ;

உச்ச நீதி மன்ற தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் .

நதிகளை தேசியமயமாக்கிட வேண்டும்  .

விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுவதும் இரத்து செய்ய வேண்டும் .

அயல்நாட்டு குளிர்பானங்களை நம் நாட்டில் தடை செய்தால் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் .

இளநீர் விற்கும்.விவசாயம் செழிக்கும் .விவசாய தற்கொலை ஒழியும்.

விவசாயிகளின் போராட்டத்தை நடுவணரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை தருகின்றது .
.
இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயம் இந்தியா கிராமங்களில்  வாழ்கிறது என்றார் காந்தியடிகள் . 
.
கோடையில் வறண்டுள்ள  ஏரிகள் , குளங்கள் ,கண்மாய்கள் உடனடியாக அரசு தூர் வார வேண்டும் .தன்னார்வ தொண்டு   நிறுவங்களும் துணை புரிய வேண்டும்

சர்க்கரை நோய் தரும் சீனியை விடுத்து, கருப்பட்டி, வெல்லம் பயன்படுத்த பொதுமக்கள் முன்வரவேண்டும் . 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !