பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! தூய்மை காப்போம் ! கவிஞர் இரா .இரவி !




பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு !

தூய்மை காப்போம் ! கவிஞர் இரா .இரவி !

சுத்தம் சோறு போடும் என்றனர் அன்று
சுத்தம் என்பது சுகாதாரம் இன்று !

தூய்மை கடைபிடித்தால் வராது  நோய்
தூய்மை கேட்டினால் வரும் புதுப்புது நோய் !

அழுக்கை அகற்றுவது கடினம் அன்று
ஐந்து ரூபாய் சலவைக்கட்டி போதும் !


இல்லம் தூய்மையாக இருந்தால்
எவருக்கும் வராது எந்த நோயும் !

தெருவை தூய்மையாக வைத்து இருந்தால்
தெருவில் யாருக்கும் நோய் வரவே வராது !

ஊரை  தூய்மையாக வைத்து இருந்தால்
ஊரில் யாருக்கும் நோய் வரவே வராது !

நாட்டை தூய்மையாக வைத்து இருந்தால்
நாட்டில் யாருக்கும் நோய் வரவே வராது !

நோய்களின் காரணி என்பது அசுத்தம்
நோயற்ற வாழ்விற்கு அவசியம்  சுத்தம் !

சுத்தம்  சுகம் தரும் முற்றிலும் உண்மை
சுத்தமின்மை நோய் தரும் என்பதும் உண்மை !

ஆள் பாதி ஆடை பாதி என்றார்கள்
அணியும் ஆடை சுத்தமாக இருக்கட்டும் !

புற அழுக்கை பொருட்படுத்தாதோர் உண்டு
புறம் அகம் இரண்டின்  சுத்தம் மிக நன்று !

சாக்கடை நீரைத் தேங்க  விடாமல்  இருந்தால்
சாகடிக்கும் டெங்கு   கொசு வரவே வராது !

குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடுவோம்
குப்பையைக் கண்ட இடங்களில் போடாதிருப்போம் !

தெருக்களையும் சாலைகளையும் சுத்தமாக்குவோம்
தேடி நம்மை சுற்றுலாப் பயணிகளை வரவைப்போம் !


சுகாதாரக்கேடு என்பது உயிருக்குக் கேடு தரும்
சுத்தம் என்பது உயிர் வளர்க்க உதவும் உணர்வோம்  !

கருத்துகள்