படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 


ஊரின் பசியாற்றியவன் 
பசியாறுகின்றன 
வரப்பில் அமர்ந்து !


போராடுகின்றனர் 
வாழ வழியின்றி 
நாதியில்லை கேட்க !


இடுப்பு வேட்டை 
தலையில் கட்டி 
உழைக்கும் உழைப்பாளி !


நம் மானம் காக்கும்
பருத்தி தருபவனும் 
உழவனே !


இழுத்து வந்து காட்டுங்கள் 
ஓடிப்போன மல்லையாவிற்கு 
இக்காட்சியை ! !

கருத்துகள்