நன்றி தகவல் உதவி பவள சங்கரி !

நன்றி தகவல் உதவி

பவள சங்கரி !

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம். வருகிற சூன் திங்கள் 9,10,11 (2017) ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். இம்மாநாடு வெற்றி பெறத் தமிழ் எழுத்தாளர்கள் தங்களது பங்களிப்பையும் அளித்திட இருகரம் குவித்து வேண்டுகிறோம். மாநாட்டில் கருத்தரங்கம், சொல்லரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நாடக நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடும் கலந்துரையாடல் போன்ற மிகச் சிறப்பான நிகழ்வுகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் கட்டுரை படைக்க விரும்புவோருக்கான விதிமுறைகள் அழைப்பிதழில் தெளிவாக உள்ளன.

மாநாடு நிகழுமிடம்:
முத்தமிழ்ப் பேரவை டி.என். இராஜரத்தினம் கலையரங்கம்,
ராஜா அண்ணாமலைபுரம், (அடையாறு பாலம் அருகில்)
சென்னை – 600028

பொருண்மைகள்

மாநாட்டு ஆய்வுக் கட்டுரைத் தலைப்புகள்

1. புலம் பெயர்ச்சியின் காரணங்களும் புதிய இட வாழ்வியல் நிகழ்வுகளும்
2. மின் மற்றும் அச்சு ஊடகங்கள் நல்ல தமிழைப் பயன்படுத்த ஆற்றும் பணிகள்.
3. பயிலாதாரையும் எளிதாய்ச் சென்றடையும் பழமொழிகளின் ஆழ் அகலங்கள்
4. தமிழ் சார்ந்த அயலக வணிகமும் கடல்சார் வணிகமும்
5. இன்றைய நவநாகரிக உலகில் தமிழுக்குரிய இடம்
6. மின்தமிழ்ப் பயன்பாடுகளும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும்
7. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ் மொழியின் பங்களிப்பு
8. புலம்பெயர் தமிழர்களின் கவின்கலை பண்பாட்டு வளர்ச்சி
9. புலம்பெயர் இலக்கியமும் மொழிபெயர்ப்புகளும்
10. புலம்பெயர் இலக்கியங்கள் அந்தந்த நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம்

மாநாட்டு மலருக்கான கட்டுரைத் தலைப்புகள்

1. பொருளியல் கோட்பாடுகளும் திருக்குறளும்
2. திருக்குறள் கோட்பாடுகளும் நாட்டு நிர்மாணமும்
3. கணினிப் பயன்பாட்டில் தமிழும் இணையத்தளமும்
4. ஊடகவியலில் தமிழுக்கான உணர்வும் ஊக்கமும்
5. அந்தந்த நாட்டுத் தமிழ் கவிதையின் புதிய போக்குகள்
6. அந்தந்த நாட்டுச் சிறுகதையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள்
7. அந்தந்த நாட்டுத் தமிழ் நாவல்களில் புதிய அணுகுமுறைகள்
8. மொழிபெயர்ப்பு நோக்கில் தமிழ் படைப்புகள்
9. பிற மொழிகளில் சங்க இலக்கியங்கள்
10. தொல்காப்பியரும் மேல்நாட்டு இலக்கியக் கோட்பாடுகளும்
11. அந்தந்த நாட்டுச் சிறுவர் இலக்கியங்களில் மொழியின் பயன்பாடு
12. பிறமொழி இலக்கிய இலக்கணங்களில் தமிழின் செல்வாக்கு
13. அந்தந்த நாட்டுத் தமிழ் இதழ்களில் தமிழ் நடையின் புதிய போக்கு
14. அகராதிக் கலையில் ஐரோப்பியர்களின் பங்கு
15. அந்தந்த நாட்டுத் தமிழ் படைப்புகளில் பெண்ணியம் ஒரு பார்வை
16. அறநூல்கள் வழி அறியும் அறக்கோட்பாடுகள்
17. அந்தந்த நாட்டுப் படைப்பிலக்கியங்களில் விளிம்புநிலை மாந்தர்கள்
18. துறைதோறும் கலைச் சொல்லாக்கத்தின் வளர்ச்சி
19. பூஜாங் பள்ளத்தாக்கு முதல் கம்போடியா வரை தமிழர் நாகரிகம்
20. அயலக வாணிபத்தால் வளர்ந்த தமிழும் பண்பாடும்
21. தமிழ் இலக்கியங்களில் புலம்பெயர்தல் நேற்றும் இன்றும்
22. தொலைந்துபோன கதைசொல்லிகளும் தமிழ் மரபும்
23. பேச்சுத் தமிழில் வலம் வரும் அழகிய ஊர்வலம்
24. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ்

நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
துணைச் செயலாளர்
2ஆம்  உலகத் தமிழ் எழுத்தாளர்  மாநாடு.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்