படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

.
பாசம் காட்டி வளர்க்கிறாள் சிறுமி 
நேத்திக்கடன் என்று 
வெட்டிவிடாதீர்கள்  !


எல்லா உயிர்களிடத்தும் 
அன்பு செலுத்தும் 
பெண்மை வாழ்க !


நிறமோ கருப்பு 
பெயரோ
வெள்ளாடு !


கருப்பின் அழகை 
போற்றும் 
வெண்மை வாழ்க ! 


அன்பு செலுத்துவதில் 
போட்டி 
இருவருக்கும் !

கருத்துகள்