தொ(ல்)லைக்காட்சி ! கவிஞர் இரா .இரவிதொ(ல்)லைக்காட்சி ! கவிஞர் இரா .இரவி

துண்டித்தது
உறவுகளின் உரையாடலை
தொ(ல்)லைக்காட்சி !

வளர்ச்சியை விட
வீழ்ச்சியே அதிகம்
தொ(ல்)லைக்காட்சி !

வன்மம் வளர்த்து
தொன்மம் அழித்தது
தொ(ல்)லைக்காட்சி !

பாலில் கலந்த
பாழும் நஞ்சு
தொ(ல்)லைக்காட்சி !

இல்லத்தரசிகளின்
போதைப்போருளானது
தொ(ல்)லைக்காட்சி !

வளர்த்துவிடும்
மாமியார் மருமகள் சண்டை
தொ(ல்)லைக்காட்சி !

கைவினைப் பொருட்களின்
உற்பத்தி அழித்தது
தொ(ல்)லைக்காட்சி !

நன்மையை விட
தீமையே அதிகம்
தொ(ல்)லைக்காட்சி !

பணம் பறித்து
மனம் சிதைக்கும்
தொ(ல்)லைக்காட்சி !

பழிக்குப் பழி வாங்கும்
உணர்ச்சிப் போதிக்கும்
தொ(ல்)லைக்காட்சி !

இரண்டு மனைவிகள்
தொடர் நாயகர்களுக்கு
தொ(ல்)லைக்காட்சி !

பண்பாட்டைச் சிதைத்து
குற்றம் வளர்க்கும்
தொ(ல்)லைக்காட்சி !

பிஞ்சு நெஞ்சங்களில்
நஞ்சு விதைக்கும்
தொ(ல்)லைக்காட்சி !

மழலை மொட்டுகள்
மனத்தைக் காயப்படுத்தும்
தொ(ல்)லைக்காட்சி !

நேரம் விழுங்கும்
சுறா மீன்
தொ(ல்)லைக்காட்சி !

விளம்பர இடைவேளைகளில்
பரிமாறப்படும் உணவுகள்
தொ(ல்)லைக்காட்சி !

ஆபாசம் காண்பித்து
புத்தியைச் சிதைக்கும்
தொ(ல்)லைக்காட்சி !

தமிழ்ப் பண்பாட்டை
தரை மட்டமாக்கும்
தொ(ல்)லைக்காட்சி !

குறுந்தகவல் வழி
பணம் பறிக்கும் திருடன்
தொ(ல்)லைக்காட்சி !

மூடி விடுங்கள்
நாடு உருப்படும்
தொ(ல்)லைக்காட்சி !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்