மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் இலக்கிய மன்றம் சார்பாக, உலக மகளிர் தின விழா நடந்தது !

மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் இலக்கிய மன்றம் சார்பாக, உலக மகளிர் தின விழா நடந்தது !


மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் இலக்கிய மன்றம் சார்பாக, உலக மகளிர் தின விழா நடந்தது !
அண்ணாமலை பல்கலைக் கழகம் ,மலாய்ப் பல்கலைக் கழகம், கலைஞன் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள மதுரை திருமலை மன்னர்  கல்லூரி பேராசிரியர் ந . செ.கி .சங்கீத் இராதா எழுதிய , "கவிஞர் இரா .இரவியின் வாழ்க்கை வரலாறு" நூல் வெளியீடு  , தமிழ்த் தேனீ 
இரா  மோகன் எழுதிய இரா .இரவி படைப்புலகம் ,
இரா .இரவி எழுதிய வெளிச்ச விதைகள் நூல்கள் அறிமுக விழாவும் நடந்தது .

வழக்கறிஞர் காந்தி வரவேற்றார் .வழக்கறிஞர் கு .சாமிதுரை நூல் ஆசிரியர்கள் தமிழ்த் தேனீ இரா  மோகன் ,கவிஞர் இரா .இரவி இருவரையும் அறிமுகம் செய்து உரையாற்றினார் .வழக்கறிஞர்  ப .கலையரசி பாரதி கவிதை வாசித்தார் .

தமிழ்த் தேனீ இரா  மோகன் அவர்கள் " கணினி யுகத்திற்கு கவிஞர் இரா .இரவியின் ஹைக்கூ கவிதைகள் "என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் .

கவிஞர் இரா .இரவி ஏற்புரையாற்றினார் .பெண் 
வழக்கறிஞர் இ .பினெகாஷ் தொகுத்து வழங்கினார். வழக்கறிஞர் சித்தார்த்தன் நன்றி கூறினார் .

அரசு வழக்கறிஞர் ,பெண் வழக்கறிஞர்கள் உள்பட பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

விழாவிற்கான ஏற்பாட்டை வழக்கறிஞர் கு .சாமிதுரை   அவர்கள் செய்து இருந்தார்கள் .

படங்கள் இனிய நண்பர் ஒளிப்பட ஓவியர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில் .கருத்துகள்

பிரபலமான இடுகைகள்