படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

பக்தனை 
ஆண்டியாக்கி விட்டு 
கோடிகளில் சாமியார்கள் !

அளவிற்கு மிஞ்சினால் 
தங்க நகையும் 
நஞ்சுதான் !

ஒரு வேளை உணவின்றி 
வாடுது ஒரு கூட்டம் 
கோடிகளில்  ஒரு கூட்டம் !
.
விற்றவர் கோடிக்கு அதிபதி 
வாங்கியவர் வறுமையில் 
பஞ்சாமிர்தம் !

பக்தனுக்கு 
மிஞ்சியது 
கோவணம் மட்டுமே !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்