படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

இராணுவத்  துப்பாக்கி 
ஏந்த வேண்டிய கரங்களில் 
ஊதுகுழாய் !

தூக்கி ஏறி
ஊதுகுழாய் 
ஏந்திடு எழுதுகோல் !

அடுப்பறையில் 
முடங்கியது போதும்  
அகிலம் காண வா !


பெண் விமானிகள் 
உலகம் சுற்றிய காலமிது 
வா புதுமைப் பெண்ணே !

வேண்டாம் அடுப்படி
 வேண்டும் கல்வி 
கல்லூரிக்குப்  புறப்படு !

கருத்துகள்