நான் கண்ட பெங்களூரு ! கவிஞர் இரா .இரவி !

நான் கண்ட பெங்களூரு ! கவிஞர் இரா .இரவி !

பெரும்பாலான தமிழர்கள் கன்னடம் அறிந்து வைத்துள்ளனர் .

பெரும்பாலான கன்னடர்கள் தமிழ் அறிந்து வைத்துள்ளனர் .

பெரும்பாலான ஆண்கள்  சூ அணிகின்றனர் .

பெரும்பாலான பெண்கள் உதட்டிற்கு வண்ணம் பூசுகின்றனர் .

கன்னடம் ,தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு ,இந்தி,ஆங்கிலம்  என பல மொழிகள் பேசுகின்றனர் .

இளையவர்கள் ,மாணவர்கள் ,சிறுவர்களை முன்பின் தெரியாத  பெரியவர்களையும் அங்கிள் ( மாமா ) என்று மரியாதையாக அழைக்கின்றனர் .

பெரும்பாலானவர்கள் கரண்டியால் உண்கின்றனர். வெங்காய தோசையைக்   கூட கரண்டியில் சண்டையிட்டு   உண்கின்றனர் .


யாரை சந்தித்தாலும் முதலில் சாப்பிட்டாச்சா என்ற கேள்வி கேக்கும் பழக்கம் எல்லோரிடமும் உள்ளது .


சீனி இல்லாத காபியை தமிழகத்தில் ( வித் அவுட் சுகர் )என்பார்கள் .இங்கு ( லெஸ் சுகர் )
என்கின்றனர் .

இங்கு தங்குவதற்கு அறைகள் 300 ரூபாய் 20000  முதல் வரை உள்ளன .

இங்கு உணவகம் ,கேயேந்தி உணவகம் முதல் நட்சத்திர உணவகமும் உள்ளன .

இங்கு அரை காபி என்று 5 ரூபாய்க்கும் தருகின்றனர் .

ஆடைகள் சாதாரண விலையில்  தொடங்கி   விலை உயர்ந்த ஆடைகள் வரை உள்ளன.

காலணிகள் சாதாரண  விலையில்  தொடங்கி விலை உயர்ந்த காலணிகள் வரை உள்ளன .

மதுக்கடைகளும் அதிகம் உள்ளன .

உலக அளவிலான மட்டை ( கிரிக்கெட் ) விளையாட்டு விளையாட பிரமாண்ட விளையாட்டு அரங்கங்கள் உள்ளன 

தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன .

தமிழ்  ஆர்வமுள்ள தமிழர்கள் ஞாயிறு அன்று கூடி கவியரங்கம் ,கருத்தரங்கம் நடத்துகின்றனர் .

பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் மாதத்தில் ஒரு ஞாயிறு அன்று எரிக் கரை கவியரங்கம் நடக்கின்றது .

பெங்களூரு தூரவாணி நகர் ஐ .டி.ஐ. தமிழ் மன்றம் பாவாணர் பாட்டரங்கில் இரண்டாம் ஞாயிறு அன்று கவியரங்கம் நடக்கின்றது .

திருவள்ளுவர் மன்றத்தின் சார்பில் மாதத்தில் ஒரு ஞாயிறு அன்று சிறுமலர் பள்ளியில் கருத்தரங்கம் நடக்கின்றது .

ஓவியக் கண்காட்சி ,சிலைக்கண்காட்சி அடிக்கடி நடக்கின்றன .

வருடம் ஒரு முறை அகில இந்திய நாணயம்  ,அஞ்சல் தலை கண்காட்சி  நடக்கின்றன .

வருடம் ஒரு முறை மகிழுந்து ,இரு சக்கர வாகனம் கண்காட்சி  நடக்கின்றன .

வருடம் ஒரு முறை கேக் கண்காட்சி  நடக்கின்றன .

வருடம் இரண்டு முறை லால் பூங்காவில் , மலர்க்கண்காட்சி நடக்கின்றன . 

பிரமாண்டமான கப்பன் பூங்கா ,லால் பூங்கா உள்ளிட்ட அதிகமான பூங்கா உள்ளன .ஹரே ராமா  ஹரே கிருஷ்ணா கோயில் உள்பட அதிகமானகோயில்கள் உள்ளன .பெரிய பள்ளிவாசல்கள் ,பெரிய தேவாலயங்கள் உள்ளன .

பெங்களூரு  வாழ் தமிழர்கள் பெரும்பாலானோர்  தமிழ் பேசும் போது  ஆங்கிலச் சொல் கலப்பின்றி நல்ல தமிழ் பேசுகின்றனர் .

இங்கு வணிகம் செய்பவர்கள் இலாபம் பார்த்து நிம்மதியாக வாழ்கின்றனர் .

விண்ணை முட்டும் பிரமாண்ட கட்டிடங்கள் உள்ளன .

பிரமிப்பில் ஆழ்த்தும் வித விதமான வண்ண மலர்கள் உள்ளன .

தொடர் வண்டி நிலைய அலுவலகம் மட்டுமின்றி தனியார் அலுவலங்களிலும்  மலர்ச் செடிகள் ,மரங்கள் வளர்த்து பச்சையம்  காத்து வருகின்றனர் .

பெரும்பாலான தானி ( ஆட்டோ ) ஓட்டுனர்கள் மீட்டர் போட்டு அதன்படியே பணம் பெறுகின்றனர் .

எல்லாவற்றிலும் சில விதி விலக்குகள் உண்டு .


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்