பெங்களூரு தூரவாணி நகர் ஐ .டி .ஐ .தமிழ்மன்றம் பாவாணர் பாட்டரங்கம் !

பெங்களூரு  தூரவாணி நகர் ஐ .டி .ஐ .தமிழ்மன்றம் பாவாணர் பாட்டரங்கம் !

பெங்களூரு  தூரவாணி நகர் , ஐ .டி .ஐ .தமிழ்மன்றம் பாவாணர் பாட்டரங்கில், கவிதாயினி  வீணைதேவி தலைமையில் "பெண்கல்வி" என்ற தலைப்பே கவியரங்கம் நடந்தது . விழாவிற்கு நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் தலைமை  வகித்தார் .கவிஞர்கள்  கே .ஜி. இராஜேந்திர பாபு ,நா .மகிழ்நன் ,தனம் வேளாங்கண்ணி, மூர்த்தி ,எழுத்தாளர் ஜெயா வெங்கடராமன்,இரா .இரவி உள்ளிட்ட பலர் கவிதை வாசித்தனர் .

உடனடி 2 நிமிடக்கவிதை போட்டி நடந்தது . "தாய் மொழி" என்ற தலைப்பு தரப்பட்டது .  கவிஞர் கே .ஜி .இராஜேந்திர பாபு முதல் பரிசு பெற்றார் .கவிஞர் இரா .இரவி இரண்டாம் பரிசு பெற்றார் .

அண்ணாமலை பல்கலைக் கழகம் ,மலாய்ப் பல்கலைக் கழகம், கலைஞன் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள மதுரை திருமலை மன்னர்  கல்லூரி பேராசிரியர் ந . செ.கி. சங்கீத் இராதா எழுதிய , "கவிஞர் இரா .இரவியின் வாழ்க்கை வரலாறு" நூல் அறிமுகம் செய்யப்பட்டது .எழுத்தாளர் ஜெயா வெங்கடராமன் எழுதிய கன்னட மொழி பெயர்ப்பு தமிழ் நாவல்  சார்த்தா அறிமுக செய்யப்பட்டது .

இரண்டு நூல்கள் பற்றியும் கவிஞர் கே .ஜி .இராஜேந்திர பாபு ஆய்வுரை வழங்கினார் .


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்