பெங்களூரு தூரவாணி நகர் ஐ .டி .ஐ .தமிழ்மன்றம் பாவாணர் பாட்டரங்கில் நடந்த உடனடி 2 நிமிடக்கவிதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை !


பெங்களூரு தூரவாணி நகர் ஐ .டி .ஐ .தமிழ்மன்றம் பாவாணர் பாட்டரங்கில் நடந்த உடனடி 2 நிமிடக்கவிதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற
 கவிதை !

நடுவர் இனவெழுச்சிப் பாவலர் மகிழ்நன் !
தலைப்பு "தாய் மொழி" கவிஞர் இரா .இரவி !
தாய்மொழியே சிறந்தது என்று அன்றே
தேசப்பிதா காந்தியடிகள் உரைத்தார் நன்றே !
நோபல் நாயகன் இரவீந்திரநாத் தாகூரும்
நன்றே உரைத்தார் தாய்மொழியே சிறப்பென்று !
கருவாக இருக்கும்போதே சேயுக்கு
கற்கண்டாக இனிக்கும் தாய் பேசும் மொழி !
தாய்மொழியில் சிந்தித்தால் சாதிக்கலாம்
தாய்மொழியில் பயின்றால் சிகரம் தொடலாம் !
தாய்மொழியில் பயின்றவர் அப்துல் கலாம்
தாய்மொழியில் பயின்றவர் மயில்சாமி அண்ணாத்துரை !
ஆரம்பக்கல்வி தாய்மொழி தமிழில் இருந்தால்
அனைத்துத் துறையிலும் சாதிக்கலாம் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்