தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எதிர்காலம் ! கவிஞர் இரா .இரவி !

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

எதிர்காலம் ! கவிஞர் இரா .இரவி !

எதிர்காலம் பற்றிய கவலையில் பலர் 
நிகழ்காலத்தை வீணடித்து வருகின்றனர் !

இன்று நன்றாக வாழப் பழகு மானிடனே 
இந்த நிமிடம் கழியட்டும் நன்றே !

எதிர்காலம் எதிர்காலம் என்று சொல்லியே 
இனிய குழந்தைகளின் மகிழ்வை அழிக்காதீர்கள் ! 

நாளை என்பது உறுதி இல்லை ஆனால் 
நாளும் இன்று என்பதே இனிமையாகும் !

இந்த நொடியை இந்த நிமிடத்தை 
இனிமையாக்கு இனிமை நாளையும் தொடரும் !

நாளைய கனவிலேயே பலர் இன்று 
நாளை வீணாய்  கழித்து வருகின்றனர் !

இன்று இருப்பார் நாளை இருப்பதில்லை 
என்பது வாழ்வியல்  கண்ட உண்மை !

இன்றே  வாழ்நாளில் கடைசி என்று எண்ணி 
இனி ஒவ்வொரு நாளும் வாழ்ந்து பழகு !

உனக்கான தன்னல வாழ்வு வாழ்வல்ல 
ஊருக்காகவும் வாழ்ந்து பழகு இனிக்கும் !

உதவ எண்ணினால் நாளை என்று 
ஒதுங்காமல் இன்றே நன்றே செய்திடு !

இறந்த பின்னும் நீ வாழ விரும்பினால் 
இன்றே நன்று  செய்து வாழ்வாங்கு வாழ் ! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !