படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 


பூமி மகள் தவிக்கிறாள் 
வாய் பிளந்து 
இரக்கமின்றி மனிதர்கள் !

வான்மழை பொய்த்தது 
வறண்டது 
வளமான பூமி !

ஒற்றுமை விரிசலால் 
விழுந்தன 
நிலத்தில் விரிசல்கள் !

பூமியின் தவித்த வாயுக்கு 
தண்ணீர் தர மனமில்லை 
இரும்பு மனம் ! 

வானமே 
அமுதமழை பொழிந்திடு 
செழிக்கட்டும் பூமி !

கருத்துகள்