ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை மடல் ! கவிபாரதி விருதாளர் ! கவிதாயினி மு.வாசுகி மேலூர் !
ஹைக்கூ முதற்றே உலகு !

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் மதிப்புரை மடல் !

கவிபாரதி  விருதாளர்  !  கவிதாயினி மு.வாசுகி மேலூர்  !

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17.  பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 .


கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு! வணக்கம்!

      தங்களின் பதினைந்தாவது நூலின் “ஹைக்கூ முதற்றே உலகு” என்ற நூலைப் படித்தேன். “அதில் இலக்கிய உலகில் எனக்கு ஆதரவு நல்கி வருபவர்களைப் பட்டியலிட்டால் நூல் தாங்காது என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளவர்கள்.

 நூறு சதவீத உண்மை என்பது என் போன்றோருக்கு மிக நன்றாகவே தெரியும் காரணம் உங்களைப் பழகியவர்களை மட்டும் இரண்டு நபரிடம் பழகிய உணர்வு ஏற்படும். முதலில் நீங்கள் நல்ல மனிதர்! இரண்டாவது கவிஞர்!

      நீங்கள் விமர்சனத்தையெல்லாம் தாண்டி மிக உயர்ந்த நிலையை அடைந்து விட்டீர்கள் என்பதால் நான் இந்நூலுக்கு விமர்சனம் எழுதாமல் கடிதம் எழுத ஆரம்பித்தேன் ஆனால் உங்களின் சில கவிதை வரிகள் என்னை எழுத வைத்து விட்டது.
இது சமுத்திரத்திற்கு சன்னல் எழுதும் கடிதம்;

அட்டைப் படம் அதிக வண்ணமில்லாமல் அழகாக உள்ளது பின்பக்க அட்டையில் மதிப்பிற்குறிய  இறையன்பு இ.ஆ.ப. அவர்களும், இரா. மோகன் அவர்களும் இருப்பது இந்நூலை விரும்பி வாங்குவதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் தோரணவாயிலில் வாசகர்களை வரவேற்பது மிக மிக அழகு.  நம் தேசமே நேசித்த இன்னும் நேசிக்கப்படுகின்ற அப்துல்கலாம் ஐயாவுடன் நீங்கள் கரம் குழுக்கும் புகைப்படம் புகழின் உச்சிக்கு இந்நூலை எடுத்துச் செல்லும் என்பது உறுதி.

      ‘கற்பித்தது தாய்மொழி
      புலம் பெயர்ந்தோருக்கு
      வானொலி
.

என்ற வரிகளில் உண்மையும், சிறப்பையும் ஒருங்கே அமைந்துள்ளது.

      ‘உயிர் மேய்ப்பர்கள்
      உயிர் மீட்பர்கள்
      மருத்துவர்கள்

என்ற வரிகளில் மிகச் சரியாக இதுவரை சொல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது அருமை!

      ‘தோட்டம் அழித்து
       கட்டிய வீட்டில்
       செயற்கை மலர்கள்!

இவ்வரிகளை வாசிக்கும் போட்டி இயற்கை அழிந்த வேதனையும், செயற்கை மீதுள்ள மோகத்தையும் ஒரு சேர உணர்த்துகிறது.

      “பெண்புத்தி பின்புத்தி
       பின்னால் வருவதை
       யோசிக்கும் புத்தி!

      இதுவரை யாரும் உணர்த்தாத புதிய சிந்தனை வடிவம் பெற்றது. பெண்களின் மத்தியில் மிகவும் வரவேற்கப்படும் கவிதை நூல்.

      ‘மூன்றாவது கை
       ஏழாம் அறிவு
       நண்பர்!

நட்புக்கென்று எத்தனையோ கவிஞர்கள் எத்தனையோ வரிகளை எழுதியிருந்தாலும் இந்த வரிகள் நட்பு உலகில் கல்வெட்டாய் பதிக்கப்படும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும் காரணம் நான்கே சொற்களில் நட்பின் ஆழத்தை அளந்துள்ளீர்கள்.

      ‘சலுகையுள்ள மாடு
      படுகையெல்லாம் மேயும்
      அமைச்சர் உறவினர்!

இன்றைய அரசியல் வாழ்வின் கண்ணாடியாய் அமைந்துள்ளது இவ்வரிகள்.

அத்தனை கவிதைகளும் அருமையாக உள்ளது. கவிதை, விமர்சனம் என இரண்டிலுமே நல்ல இடத்தைப் பெற்று விட்டீர்கள்.

இனி கதை, கட்டுரையிலும் கால் பதிக்க வேண்டுகிறேன்.
                                                      

                                                                                                  


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்