பெண்ணியம் பாடுவோம்! கவிஞர் இரா .இரவி !

பெண்ணியம் பாடுவோம்! கவிஞர் இரா .இரவி !

கணவனை இழந்தவள் விதவை சரி 
மனைவியை இழந்தவன் சொல் என்ன ?

மான பெண்ணிற்கு தாலி அடையாளம் சரி 
மணமான ஆணிற்கு அடையாளம் என்ன ?

ஆண் எழுத்து நெடிலில் தொடக்கம் 
பெண் எழுத்து குறிலில் தொடக்கம் !

எழுத்திலும் அநீதி பெண்ணிற்கு 
அன்று முதல் இன்றும் தொடரும் அநீதி !

ஆட்டிற்கு மாட்டிற்கு கோழிக்கு பெண் என்றால் மகிழ்வு 
ஆனால் பெண்ணிற்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்வு ! 

ஆண்டாண்டு காலமாய் அடிமைப்படுத்தி விட்டனர்
அடுப்படியை பெண்களுக்கு என்றே ஒதிக்கி விட்டனர் !

ஆண் என்ற ஆணவத்தை சமுதாயம் நாளும்
ஆணின் மனதில் குழந்தையிலேயே விதைக்கின்றனர் !

பெண் என்றால் அடிமைத்தனத்தை நாளும்
பெண்ணின் மனதில் குழந்தையிலேயே விதைக்கின்றனர் !

பெண்ணுரிமை பேசிடும் முற்போக்குவாதிகளும் 
பெண்களை வீட்டில் அடிமையாகவே நடத்துகின்றனர் ! 

பெண்களுக்கான இடஒதிக்கீட்டை தராமல்  அரசியல்வாதிகள்
பெண்களை பல்லாண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர் !
.
பெண்ணின் உணர்வுகளுக்குமதிப்பளித்து இனியாவது
பெண்ணின் மனதை மதித்து நடங்கள் !

பிள்ளைப் பெறும்  இயந்திரமன்று பெண்கள்
பேதைமை காட்டாமல் சம உரிமை தந்திடுங்கள் !

மோகம் தீர்க்கும் போகப் பொருள் அல்ல பெண்கள்
முக்கியமானவர்கள் பெண்கள் போற்றி  வாருங்கள் !

பெண்கள் இன்றி  இந்த உலகமில்லை யாருமில்லை
பெண்கள் இந்த நாட்டின் கண்கள் உண்மையிலும்  உண்மை !

பெண் இல்லா உலகம் பாலைவனத்தில் மோசம் 
பெண்ணை மதிப்போம் மதிப்பளிப்போம் போற்றுவோம்

கருத்துகள்