துணையாய் தொடரும் நிழல்கள் ! கவிஞர் இரா .இரவி !

துணையாய் தொடரும் நிழல்கள் ! கவிஞர் இரா .இரவி !

துணையாய் தொடரும் நிழல்கள்அவள் நினைவுகள் !
தோழியாய் இருந்து காதலியாக மாறினாள் ! 

கடவுள் உண்டு என்று அவள் வாதிட 
கடவுள் இல்லை  என்று நான் வாதிட !

வாதத்தில் தொடங்கி வசந்தத்தில் முடிந்தது 
வஞ்சி அவள் என்னைக் காதலித்தாள் !

எனக்கு என்ன பிடிக்கும் அவள் கேள்வி 
உனக்கு என்ன பிடிக்கும் என்  கேள்வி !

எனக்குப் பிடித்தவை அவளுக்கும் பிடித்தன 
அவளுக்குப் பிடித்தவை எனக்கும் பிடித்தன !

ஒரே நேர்கோட்டில் இருவரும் பயணித்தோம் 
ஒரே வாழ்வு இருவர் வாழ முடிவெடுத்தோம் !

வழக்கம் போல வந்தது காதலுக்குத் துன்பம் 
வஞ்சியைப் பிரித்தார்கள் என்னிடமிருந்து !

எல்லாக்  காதலும் எல்லோராலும் ஏற்கப்படுவதில்லை
ஏதோ ஓரிரு காதலே திருமணத்தில் முடிகின்றன !

காதல் தோல்வி என்னுள் கவிதை வளர்த்தது 
காதலி நினைவாக கவிதைகள் பெருகியது 
.
மூளையின் ஒரு ஓரத்தில் நிரந்தர இடம் 
மங்கை அவள் பிடித்திருப்பது உண்மை !

பேச்சு வாரத்தை எங்களுக்குள் இல்லாவிடினும் 
பசுமையான நினைவுகள் மட்டும் மறக்கவில்லை !

பசுமரத்து ஆணி போல பதிந்திட்ட நினைவுகள் 
பசுவினைப் போல அவ்வப்போது அசைபோடுகின்றேன் !
   
உண்மையான காதலுக்கு அழிவில்லை உண்மை 
உள்ளத்துள் உயர்ந்த இடம் என்றும் உண்டு !

என் கவிதைகளின் முதல் ரசிகை அவள் 
என்னுள் கவிதை விதை விதைத்த விவசாயி !

இருவரும் பிரிந்து பல்லாண்டுகள் ஆனபோதும் 
எங்களுக்குள் தொடரும்  நிழலாய்  நினைவுகள் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraraviகருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !