படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

-- மார்ச்-8,  சர்வதேச பெண்கள் தின கவிதை.

சத்திய உருவே  சக்தியின் வடிவே
      சாதனைக் கடலே  சரித்திர மடலே!
வித்திடும் வித்தே  வாழ்வியல் சொத்தே
      விடுதலைக் கொடியே  வெற்றியின் மடியே!
தத்துவ விடிவே  தாய்மை வடிவே
       புலரும் பொழுதே  பூமியின் விழுதே!
சித்திரக் கலையே  சந்தன சிலையே
        சிந்தனைச் சிறகே  சிறந்திடும் உறவே!

சமையல் கலையே  சான்றோர் அவையே
         சரித்திர படைப்பே  சாதனை வடிப்பே!
உமையாள் அருளே  உழைப்பின் பொருளே
         உலகின் அறிவே  ஒழுக்க செறிவே!
அமைதியின் உருவே  அதிசய திருவே
         அறிவியல் துறையே  ஆளும் திரையே!
இமையின் கண்ணே  எதிலும் பெண்ணே
          ஏற்றம் கொண்டு  எழுகிறாள் இன்று!

வளையல் கரமே  வாழ்வின் உரமே
        வளையா மனமே  வாழ்த்தும் குணமே!
முளைக்கும் விதையே  முழுமைக் கதையே
        முடியாத் தொடரே  முத்துச் சுடரே!
திளைக்கும் அழகே  தீரா அமுதே!
         தேனின் குரலே  தெய்வத் திரளே!
விளையும் நிலமே  வெற்றிக் களமே
         விரத்தின் மண்ணே  வென்றவள் பெண்ணே!
                                   -ப.கண்ணன்சேகர், 9894976159.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்